நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும் YE MUST BE BORN AGAIN Oakland California U.S.A. 58-06-19 1. இங்கே பேசிக் கொண்டிருந்து, எல்லாரும் ஒரு நல்ல நேரத்தைக் கொண்டிருக்கிறார்கள், நானும் அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன், அதன்பிறகு அவ்விதமான ஏதோ வொன்று கூறப்படுகிறது. [சகோதரன் பிரன்ஹாமைக் குறித்து ஒரு சகோதரன் பேசுகிறார் - ஆசிரியர்.) இந்தக் காலையில், சாலையில் வந்து கொண்டிருக்கும் போது, நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன், நான் காலை உணவுக்காக தாமதமாக இருந்தேன், மேலும்... எனவே நாங்கள் தேசத்தில் ஏறக்குறைய பத்து மைல்கள் வெளியே தங்கியிருந்தோம். நான் எத்தனை தடவைகள் தாமதமாகி இருந்திருக்கிறேன் என்று நினைத்துப் பார்க்க நேர்ந்தது. என்னுடைய திருமணத்துக்கும் கூட நான் தாமதமாயிருந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் எனக்காக காத்துக் கொண்டே, காத்துக்கொண்டேயிருந்தார்கள். இப்பொழுது, நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும் என்னுடைய அடக்க ஆராதனைக்கும் என்னால் தாமதமாக இருக்க முடியுமானால், அது... [யாரோ ஒருவர், ஆயினும் நீர் விவாகம் செய்து கொண்டீர் என்று கூறுகிறார்” - ஆசிரியர்.) ஆமாம், நான் விவாகம் செய்துகொண்டேன். ஆமாம், அது.... 2. நல்லது ஒரு... இங்கே இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது, நான்... வருவதற்கு முன்பாக, நான் -நான் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இந்த ஐக்கியத்தைக் கொண்டிருக்கும்படியாக, வெறுமனே குறுகிய நேரமே இங்கேயிருக்கிறேன்.... என்னுடைய ஊழியமானது அநேக வித்தியாசமான இடங்களுக்கு நெருக்கி அடைத்து வைக்கப்படுதலும் திணிக்கப்படுதலுமாக (ramming and cramming) அப்படிப்பட்ட ஒரு காரியமாக இருந்து வருகிறது. எனக்கு உண்டாகும் கஷ்டங்கள் யாருக்குமே தெரிவதில்லை. போய் ஜனங்களைச் சந்தித்து, அவர்களுடைய கரங்களைக் குலுக்குவதிலிருந்து விலகியிருக்கும்படி, சென்ற இரவில் நான் கூறினபடி, போஜனம் பண்ணும்படியாக, ஒரு சீமாட்டி என்னை தங்கள் வீட்டிற்கு அழைத்திருந்தார்கள். என்னே, உண்மையிலேயே நல்ல பழைமையான தீட்டப்படாத உமிநீக்கிற கூல வகைகளில் (grits) கொஞ்சம் கொண்டிருந்தேன் என்பதை கற்பனை செய்து பார்த்தேன். தெற்கில் (அதைச் செய்வதற்காக அதற்கு என்ன தேவையாயிருக்கிறது, உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் எவ்வாறு அதைச் செய்யப் போகிறீர்கள். பாருங்கள், உங்களால் - உங்களால் முடியாது. 3. எனவே நான் அப்படியே இந்தக் காலையில் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், அது - அது இங்கே அப்படிப்பட்ட ஒரு அற்புதமான நேரமாக இருந்து வருகிறது, நான்... சென்ற இரவில், வியாதியஸ்தர்களுக்கான ஜெபத்தைக் குறித்து குறிப்பிட்டேன். பிற்பகலில் பில்லி வருகிறான், அவன் வழக்கமாக செய்கிறபடி, சுற்றிலுமுள்ள வாலிப ஜனங்களையும், எல்லாரையும் போய் பார்த்து, அவர்களுடைய கரங்களைக் குலுக்கிக் கொண்டிருக்கிறான். அதன் பிறகு அவன் திரும்பி வந்து, அப்பா, அங்கே ஜெபிக்கப்படுவதற்காக நிறைய ஜனங்கள் இருக்கிறார்கள்” என்றான். இப்பொழுது, நான்..... இந்தக் கூட்டத்தில் இருப்பதைக் போன்று, நான் ஜனங்களுக்காக ஜெபிக்காமல் இருந்து வருவதற்குக் காரணம் என்னவென்றால்.... நான் இப்பொழுது தான் டல்லாஸை விட்டு வந்திருக்கிறேன்; நீங்கள் எல்லாரும் டல்லாஸைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தீர்கள். இவ்விதமான கன்வென்சன் கூட்டங்களில், ஏன், நான் பெரும்பாலும் பிரசங்கம் பண்ணவே முயற்சிக்கிறேன் (நீங்கள் பாருங்கள்--?) ஏனென்றால் அந்தத் தரிசனங்களிலிருந்து இளைப்பாறும்படியான ஒரு வாய்ப்பை அது எனக்குக் கொடுக்கிறது. தரிசனங்கள் தான் என்னை சின்னாபின்னமாக்கி (tears down) விடுகிறது. மேலும்... ஆனால் இதற்குப் பிறகு இன்னும் இரண்டு கூட்டங்கள் எனக்கு இருக்கிறது, அதன்பிறகு ஒரு நல்ல நீண்ட கால இளைப்பாறுதலை நான் எடுத்துக்கொள்ளப் போகிறேன். நான் அதைக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது; நான் அப்படியே, நானே அவ்விதம் உணருகிறேன்... நம்முடைய சகோதரர்களில் ஐந்து பேர் நரம்புத்தளர்ச்சியைக் கொண்டவர்களாய் ஊழியக்களத்திற்கு வெளியே இருப்பதைக் காணும்படியாக நான் அன்றொரு நாள் டல்லாஸில் இருந்தேன், ரெய்மன்ட் ரிச்சி அவர்களும் சகோதரன் கிராண்ட் அவர்களும். நான் அவரிடம் பேசினேன், அவர் அங்கே நின்று கொண்டு, தம்மைத்தாமே பிடித்துக் கொண்டு, அழுது கொண்டிருந்தார். மற்றொரு மனிதர் இவ்விதமாக தமது கரங்களை வெளியே வைத்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தார், அவர் நரம்புத்தளர்ச்சியினால் அலறிச் சத்தமிட்டுக்கொண்டு, அதிக நீண்ட தூரம் போய்க் கொண்டிருந்தார். மேலும், உங்களுக்குத் தெரியும், நாம் மரத்தூளிலிருந்து உண்டாக்கப்பட்டவர்கள் அல்ல; நாம் இன்னும் மனிதர்களாகத் தான் இருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியும். மேலும் எனவே, டிசம்பர் மாதம் முதற்கொண்டு நான் நிறுத்தவேயில்லை. எனவே நான்-நான் அப்படியே கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. 4. நான் -நான் இந்த ஆராதனைகளை முடிக்கும்படிக்கு சந்தோஷமாயிருப்பேன். நான் இருந்து வருகிறவிதமாக நான் உங்களைப் பார்த்து உரக்கக்கத்திக் கொண்டிருப்பதைக் குறித்து எப்படியும் நீங்கள் எல்லாரும் களைப்படைந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒருவிதத்தில் அதை அந்தச் சகோதரிகளோடு சரிப்படுத்திக் கொள்வதற்காக ஒரு இரவைக் கொண்டிருக்க வேண்டுமென்று நான் எண்ணினேன், அவர்களைப் பற்றி நான் பேசிக் கொண்டிருக்கிற விதத்தைக் குறித்து சரிப்படுத்தும்படியாக. ஆனால், சகோதரிகளே, நான் அதை உங்களிடம் (கூறக் கருதவில்லை என்று நீங்கள் அறிவீர்கள், (பாருங்கள்-?). உங்களை ஆள்மாறாட்டம் செய்பவர்களிடம் தான் நான் அதைக் (கூறக்கருதினேன். பாருங்கள்-? அந்த.... நல்லது, இதோ ஒரு காரியம் இருக்கிறது. ஒரு ஸ்திரீ, மனிதன் ஸ்திரீயை ஆளுகை செய்ய வேண்டுமென்று அவர் அவளை உண்டாக்கினதாக கர்த்தர் சொல்லியிருக்கிறார் என்று நம்புகிறேன். நீங்கள் அதைச் செய்யும்படியாக ஒரு மனிதன் அனுமதிக்கிற காலம் வரையில், அவன் அதைச் செய்யட்டும், நல்லது, அப்படியானால், அது மனிதனுடைய குற்றம் தான், இல்லையா--? அது சரியே. (சகோதரன் பிரன்ஹாம் சிரிக்கிறார் - ஆசிரியர்.) அவர்களை ஆளுகை செய்பவனுக்கு அவர்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். 5. ஆனால் சபையானது, அது இருக்கிற நிலைமையில் ஆகிக்கொண்டு இருக்கிறதை காணும் போது, அது என்னை மிகவும் வினோதமாக உணரும்படிச்செய்கிறது. நான் -நான் முரட்டுத்தனமாக இருக்க வேண்டுமென்று கருதவில்லை; உங்களுக்கு அது தெரியும். ஆனால் ஊழியக்காரர்களும் எல்லாரும் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டிருக்கும் இடமாகிய கன்வென்சன் கூட்டங்களில் அதை உண்மையாகவே வைக்கும்படியான வாய்ப்பை நான் பெற்றுக்கொள்ளும் போது, அவர்களும் கூட அதை வைக்கத் தொடங்குவார்கள் (உங்களுக்குப் புரிகிறதா--?) எனவே அப்போது நாம் - நாம் - நாம் அதைச் செய்ய விரும்புவதில்லை. ஊழியக்காரர்கள் அதைத் துவங்கச் செய்யும்படியாக, அதனோடு கூட சிறிது மனோ சாஸ்திரமும் உபயோகிக்கப்பட வேண்டியிருக்கிறது, உங்களுக்குத் தெரியும். "இது தான் இது" என்று நம்முடைய பிதாக்கள் வழக்கமாக ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தினது (lay down) போன்று நாமும் பழைய வெட்டும் ஒழுங்கு கட்டளை (hewing line)-க்குத் திரும்பிச் செல்வோமானால். பாருங்கள்--? அவர்கள் அதைக்கொண்டே பின்பற்றினார்கள். புரிகிறதா--? எனவே இப்பொழுது அது நமக்கு அவசியமாயிருக்கிறது. சாத்தான், ஒரு - ஒரு - ஒரு மிகவும் தந்திரமான சத்துருவாக இருக்கிறான், அவன் அப்படியே அவ்வண்ணமாக உள்ளே வருகிறான்.... பாவமானது மிகவும், நான் என்ன சொல்லுவேன் என்றால், அது மிகவும் புத்திசாலித்தனமாகவும், முரட்டுத்தனமாகவும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும், அது அப்படியே.... அது தந்திரமாக உள்ளது, அது ஒருவிதத்தில் அப்படியே.... அது தான் அந்த வார்த்தை: நுட்பமானது (அருமையானது). அது மிகவும் நுட்பமாக இருக்கிறது, அது மிக எளிதாக உள்ளே வந்து விடுகிறது என்று உங்களுக்குத் தெரியும்; அது மிகவும் அப்பாவித்தனமாக தோற்றமளிக்கிறது. நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், அது ஒரு வலையைக் கொண்ட சிலந்திப் பூச்சியைப் போன்றது, அது உங்களைப் பிடித்துக் கொள்கிறது; அங்கே தான் நீங்கள் போகிறீர்கள். நான் -நான் ஒரு காரியத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் பாதையின் முடிவைக் குறித்து. அது அனேகமாக எனக்கு மிக அதிக தூரமில்லை. இன்னும் நான் ஒரு பையன் அல்ல. மறுபடியும் ஜனங்கள் எல்லாரையும் சந்திக்கும் அந்நேரத்தைக் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டியவனாயிருக்கிறேன். ஒரு முறை என்னுடைய நண்பர் என்னிடம் கூறிக் கொண்டிருந்தார்; அவர்கள் ஒரு - ஒரு பரிசைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உண்மையாகவே இது நம் ஒவ்வொருவரின் கீழே அடிப்புறத்திற்கு போகும்படி விரும்புகிறேன். 6. பிரிட்டிஸ் கொலம்பியாவில் உள்ள, வான்கூவரில், மிதிவண்டியை ஓட்டக்கூடிய ஒரு பையனுக்கு ஒரு பரிசைக் கொடுப்பதாக இருந்தார்கள்... பன்னிரண்டு அங்குலங்கள் குறுக்காக, நூறு கெஜம் தூரத்திற்கு ஓட்டினால், அவர்கள் அவனுக்கு ஒரு புதிய சுவின் மிதிவண்டியை கொடுப்பார்கள். எல்லா பையன்களுமே, தாங்கள் தான் மிதிவண்டி ஓட்டுவதில் மகத்தானவர்கள் என்று எண்ணிக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் தாய்க்காக நகர்ப்புறம் சென்று, ஒரு கூடை மளிகை சாமான்களை வாங்கி, அவர்களுடைய கையின் கீழ் வைத்தவாறு, ஒரு போதும் கைப்பிடிகளை தொடவும் கூட செய்யாமல் மிதிவண்டியை ஓட்டிக் கொண்டு திரும்பி வருவார்கள். எனவே ஒவ்வொருவருமே இந்தப் போட்டியில் தான் தான் வெற்றி பெறப் போகிறான் என்று அறிந்திருந்தார்கள். அவர்கள் அங்கே பெண் தன்மைக் கொண்ட ஒரு சிறு பையனை உடையவர்களாய் இருந்தார்கள், அது அப்படியே, உங்களுக்குத் தெரியும், அம்மாவின் மகனைப் போன்று. அவர்களில் யாரும் அவன் பேரில் அதிககவனம் செலுத்தவில்லை. எனவே அவர்கள் - அவர்கள் எல்லாரும் தங்கள் - தங்கள் நேரத்தைப் பெற்றிருந்தார்கள்.... அவர்களுடைய எண்கள் அழைக்கப்படுகையில், அவர்கள் மிதிவண்டியை ஓட்டுவதற்காக இந்தப் பலகையின் மேல் ஏறினார்கள். ஒவ்வொருவருமே அதிலிருந்து விழுந்து விட்டார்கள். ஆனால் பெண் தன்மை கொண்ட சிறு பையன் சரியாக அதன் முடிவு வரைக்கும் அதை ஓட்டிச் சென்றான், ஒரு போதும் தள்ளாட வேயில்லை. எனவே அந்தப் பையன்கள் எல்லாரும் அவனிடம் ஒன்றாக கூடிவந்து, 'நீ எப்படி அதைச் செய்தாய்-?" என்று கேட்டார்கள். 7. அவன், "பையன்களே, நான் உங்களிடம் கூறுகிறேன்; இங்கே தான் அது இருந்தது. நீங்கள் எல்லாரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நான் கவனித்து, உங்களுடைய தவறைக்கண்டேன்” என்றான். பாருங்கள்-? "நீங்கள் இவ்விதமாக கீழே பார்த்துக் கொண்டே, அந்தப் பலகையின் மேல் அதைத் தொடர்ந்து ஓட்ட முயற்சித்துக் கொண்டிருந்தீர்கள். நானோ முடிவையே கவனித்து, சீராக (சென்று) விழாமல் பார்த்துக் கொண்டேன்” என்றான். அங்கே தான் காரியம் பாருங்கள், பாருங்கள்-?); அது தான் யோசனையாக இருக்கிறது. சரியாக இங்கே என்ன இருக்கிறது என்பதல்ல, ஆனால் முடிவில் என்ன இருக்கிறது என்பதாக இருக்கிறது, கர்த்தராகிய இயேசுவை நோக்கியவாறு சீராக தொடர்ந்து செல்லுங்கள். இப்பொழுது, நாம் சற்று நேரம் ஜெபிக்கலாம். கர்த்தாவே, எங்களுடைய சிந்தைகளை உம்மேலேயே வைத்திருக்கட்டும்; நாங்கள் இயேசுவைக் காண்போமே, அந்நேரத்தை நோக்கியே, அந்த முடிவை நோக்கியே நாங்கள் பார்க்கட்டும். கர்த்தாவே, இங்கே இந்தக் கன்வென்சன் கூட்டத்தில், இப்பொழுது அருமையான சகோதரர்களும் சகோதரிகளும் கொண்ட இந்தக் கூட்டத்தினர். இங்கே காலை உணவையும் ஐக்கியத்தையும் கொண்டிருக்கும்படியாக ஒன்றாக கூடி வந்திருக்கிறார்கள். நாங்கள் அடுத்து சந்திக்கும் நேரமானது ஒரு காலை உணவில் இருக்காமல், ஆனால் ஒரு கலியாண விருந்தில் இருக்குமா என்றும் எங்களுக்கு எப்படித் தெரியும், அங்கே நாங்கள் கர்த்தருடைய சந்தோஷத்தை என்றென்றுமாக பகிர்ந்து கொள்வோம். கர்த்தாவே, வருடக்கணக்காக பிரசங்கித்துக் கொண்டு, தலைமயிர் நரைத்தவர்களாகவும், சரிந்த தோள்களை உடையவர்களாகவும் இங்கே இக்காலையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த மனிதர்களை ஆசீர்வதியும். ஓ தேவனே, அவர்கள் எவைகளை தியாகம் செய்திருக்கிறார்கள் என்றும் எதனூடாக அவர்கள் போனார்கள் என்றும் உமக்கு மாத்திரமே தெரியும். மேலும், பிதாவே, உமது பார்வையில் எனக்குக் கிருபை கிடைக்குமானால், இந்த சகோதரர்களை ஆசீர்வதித்து, இன்னுமாக ஒரு மகத்தான ஊழியங்களை அவர்களுக்குக் கொடுத்தருள வேண்டுமென்று என்னுடைய முழு இருதயத்தோடும் ஜெபிக்கிறேன், கர்த்தாவே, அவர்களுடைய எல்லா தனித்தன்மைகளிலும் அவர்களுடைய ஊழியத்திலும் அவர்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குத் தேவையாயிருக்கிறார்கள், இன்னும் அவை எல்லாமே பரிசுத்தவான்கள் மற்றும் விசுவாசிகளைக் கொண்ட உமது மகத்தான சரீரத்தை அமைக்கும்படியாகவே போகிறது. கர்த்தாவே, நான் அவர்களுடைய சகோதரனாகவும் ஒரே இராஜ்யத்தின் சகபிரஜையாகவும் நின்று கொண்டிருக்கையில், முன்னோக்கிப் போகும் படியாக எங்களை ஊக்கமூட்டும் ஒரு சில வார்த்தைகளை பேசும்படியாக இக்காலையில் எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில், நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். 8. நான் உங்களிடம் ஒரு சிறு பொருளின் பேரில் பேசுவதற்கு முன்பாக, நான் அப்படியே வியப்படைகிறேன், இன்றிரவு நான் சுகமளிக்கிற ஆராதனைகளை நடத்த துவங்கினால், பரிசுத்த ஆவியானவர் அதிக சந்தோஷப்படுவார் என்று எத்தனை பேர் நினைக்கிறீர்கள்-? ஆலோசனை செய்வதற்கு எனக்கு நேரமில்லை, நாங்கள் - நாங்கள் கொஞ்சம் ஜெப அட்டைகளை விநியோகிக்க வேண்டியிருக்கிறது, ஏனென்றால், இந்த ஜனக்கூட்டத்தினர் இங்கே வரட்டும், இந்த ஒருவர் இங்கே வரட்டும்" என்று கூறும்படியாக மிக அநேக ஜனங்கள் அங்கேயிருக்கிறார்கள். நாங்கள் அட்டைகளை - ஜெப அட்டைகளை வெளியே கொடுக்க வேண்டியிருக்கிறது. அடுத்த இரண்டு இரவுகளுக்கு சுகமளிக்கும் ஆராதனையை நடத்துவதற்கு அது ஒரு நல்ல காரியமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, எனவே என்னால் பொதுவான யோசனையை பெற்றிருக்க முடியுமா-? நாம் பார்க்கலாம்.... நல்லது, உங்களுக்கு நன்றி. அதெல்லாம் சரி தான். இப்பொழுது, அப்படியானால் நாம் அதைச் செய்வோம். உங்களுடைய பிற்பகல் கூட்டம் எப்போது இருக்கிறது, ஐயா-? இரண்டு மணிக்கு. நல்லது, நான் உங்களுக்குக் கூறுவேன்; நான் லியோவுக்கு அனுப்புவேன்.... அவன் எங்கேயிருக்கிறான்-? அவன், லியோவும் ஜீனும் அங்கேயிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், ஜெப அட்டைகளை வைத்திருக்கிற பில்லி, அல்லது அவர்களில் சிலர் இந்தப் பிற்பகலில், ஒரு ஜெப அட்டையை விரும்பும் ஒவ்வொருவருக்கும் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் இன்றிரவு என்னுடைய பொருளை மாற்றிவிட்டு, வியாதியஸ்தருக்காக ஜெபிப்பேன். 9. மேலும் ஒரு... அடுத்த கன்வென்சன் கூட்டத்தில், நான், "கழுகு தன் கூட்டைக் கலைக்கிறது" என்பதின் பேரில் பிரசங்கம் பண்ண விரும்புகிறேன். கடந்த இரண்டு அல்லது மூன்று முறைகள்) நான் அதை முயற்சித்தும் அதைத்தவற விட்டு விட்டேன். சரி. இப்பொழுது, நான் வார்த்தையை அனுபவிக்கிறேன், நீங்களும் அவ்வாறு அனுபவிக்கவில்லையா-? அப்படியே வார்த்தையை அனுபவியுங்கள்... எனவே இந்தக் காலையில், நான் திடீரென்று எழுந்த போது, நான், "ஓ, மனைவியே" என்றேன், குழந்தைகள் தேசத்திற்கு வெளியே பல மைல்கள் தூரத்தில் தங்கியிருந்தார்கள், அவர்களுடைய காலை உணவைப் பெற்றுக்கொள்ளும்படியாக, என்னால் அவர்களிடம் திரும்பிச் செல்லக்கூடும் வரையில், அவர்கள் தங்களுடைய காலை உணவுக்காக காத்திருந்தனர். அந்தச் சிறு கூட்டாளிகளை என்னோடு கூட நான் வைத்திருக்கிறேன், மேலும், ஓ, நான் அந்தக் குழந்தைகளோடும் எல்லாவற்றோடும் அப்படிப்பட்ட ஒரு பெரிய நேரத்தை உடையவனாய் இருக்கிறேன். அவர்களோடு அதிகமாக இருக்கும்படி நான் போவதில்லை. நான் இரவு நேரத்தில் வீட்டிற்குப் போகும்போது, நள்ளிரவு மட்டுமாக நாங்கள் சுற்றிலும் தரையில் கிடந்து புரண்டு கொண்டிருப்போம். ஜோசப் முதுகிலும் தோள்களிலும் ஏறி சவாரி செய்ய விரும்புகிறான், மேலும் பெக்கியோ ஏதோவொன்றைக் குறித்த ஒரு கதையை நான் அவளிடம் கூறும்படி விரும்புகிறாள்; அது எப்படி போகிறது என்று உங்களுக்குத் தெரியும். எனவே, ஆயினும் எங்களுக்கு ஒரு மகத்தான நேரம் உண்டாயிருக்கிறது. 10. கடந்த இரவு ஏறக்குறைய ஒரு மணி வரையில் - அது வரையில் நாங்கள் படுக்கைக்குப் போகவில்லை. அதன்பிறகு ஜோசப், அந்த நேரத்தில், பாதி இரவும் என்னுடைய கழுத்தோடு கால்களை இரண்டு பக்கங்களிலும் போட்டுக் கொண்டு தூங்கினான் என்று நான் நினைக்கிறேன், எனவே, நாம் நம்முடைய பிள்ளைகளை நேசிக்கிறோம். மேலும் அவர்கள்... நாம் அவர்களைக் கொண்டு செல்கிறோம். நான் அவர்களைக் காலை உணவிற்கு கொண்டு சென்றேன், உங்களால் பணத்தினால் வாங்க முடியாத, மேஜையின் குறுக்காக அதை பரிமாற முடியாத ஒரு காலை உணவையும், தேவனுடைய பரிசுத்தவான்களைச் சுற்றி ஒரு ஐக்கியத்தின் காலை உணவையும் கொண்டிருக்கும் இந்த ஐக்கியத்தின் நேரத்தைக் கொண்டிருக்கும்படியாக நான் வந்து கொண்டிருக்கையில், அவர்கள் காலையிலும் நேரம் கடந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவருடைய வார்த்தையை வாசிக்காமல் எந்த ஆராதனையும் சரியாக இருக்காது, பரிசுத்த யோவான்.3, 5-வது வசனம் என்று நினைக்கிறேன், எனவே நான் அதிலிருந்து வெறுமனே ஒரு பாகத்தை வாசித்து, உங்களிடம் பேச விரும்புகிறேன், ஏனென்றால் என்னுடைய தொண்டை புண்ணாகியுள்ளது. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும்... ஆவியினாலும் பிறவாவிட்டால், அவனால் தேவனுடைய ராஜ்யத்தைக் காண முடியாது என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். 11. நாம் இங்கே சகோதர சகோதரிகளாக ஒன்றாக கூடி வந்திருக்கையில், நான் இந்தக் காலையில் வியந்து கொண்டிருக்கிறேன், ஊழியக்காரர்களும், ஞாயிறு பள்ளி ஆசிரியர்களுமாகிய நீங்கள், நீங்கள் என்னவாக இருந்தாலும். இவை எல்லாவற்றிற்கும் என்ன அர்த்தம்-? நாம் ஏன் இங்கே இருக்கிறோம்-? ஏன் இந்தப் பெரிய போராட்டம்-? நான் ஒவ்வொரு இரவும் இதைக் கூற முயற்சித்துக் கொண்டிருப்பது போன்று தோன்றுகிறது, அநேக நேரங்களில் ஸ்தாபனங்களைக் கண்டிக்கவும், இதையும் அதையும் கண்டிக்கவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்-? நான் வேதாகமத்தில் கூறப்பட்டதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒருவன் (extremist). அது உண்மை. சிலசமயங்களில் நான் ஒருபக்கம் வரையில் போய் மறுபக்கத்தை சமநிலை இழக்கச் செய்கிறேன். ஆனால் அதைச் செய்ய வேண்டும் என்று நான் கருதுவதில்லை. நான் இதைக் கூற முயற்சிக்கிறேன்: நம்முடைய அருமையான ஸ்தாபனங்கள் எல்லாம், நம்முடைய அருமையான மனிதர் எல்லாமும், நம்முடைய அருமையான பெண்மணிகள் எல்லாமும் இருந்தபோதிலும், நாம் அவருடைய பிரசன்னத்திற்குள் வரும்போது, நாம் நம்மையே குறைய காணப்படுவோமோ என்று நான் பயப்படுகிறேன், நாம் அப்போது அந்தவிதமாக இருக்க விரும்புவதில்லை. நாம் - நாம் அதை இப்பொழுதே கொண்டிருப்போம். 12. சமீபத்தில் ஒரு வயதான கறுப்பின மனிதர் ஒரு கன்வென்சனில் - அல்லது ஒரு கூட்டத்தில் என்னிடம் கூறிக்கொண்டிருந்தது போல, அவர் வேறு ஏதோவொன்றைக்கூறினார், அவர், "நான் நீண்ட காலத்திற்கு முன்பே இதைக் கர்த்தரிடம் கூறினேன். என்னிடம் ஏதாவது தவறு இருக்குமானால், நான் இப்பொழுதே அதைச் சரிசெய்து கொள்ளட்டும், ஏனென்றால் ஆற்றண்டையில் எந்தத் தொல்லையும் (நேரிட நான் விரும்பவில்லை என்று அவரிடம் கூறினேன்” என்றார். எனக்கு அது பிடிக்கும். நாம் இப்பொழுதே அதைக் கூறி விடுவோம், அப்பொழுது ஆற்றண்டையில் நமக்கு எந்த தொல்லையும் இருக்காது, ஏனென்றால் அப்போது வந்த வழியே உங்களால் பின்னோக்கி செல்ல முடியாது (பாருங்கள்-?); நாம் இப்பொழுதே அதை இன்னும் அதிகமாக நிச்சயப்படுத்திக் கொள்வோம்" என்று நான் கூற முயற்சித்து கொண்டிருந்ததை அது நன்கு தெரிவிக்கிறது என்று நினைக்கிறேன். எனவே இந்த மகத்தான தலைவனிடம் இயேசு, "நீ மறுபடியும் பிறந்தாக வேண்டும்” என்று கூறின போது. அப்படியானால் நான் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்-? அதைத் தான் நான் அறிய விரும்புகிறேன். நான் சுவிசேஷத்தின் ஒரு ஊழியக்காரனாக இருந்து, நான் ஒரு நல்ல நபராக இருந்து, நான் என்னுடைய கடன்களை அடைத்து, நான் நீதிமானாகவும், நேர்மை உள்ளவனாகவும், மனுஷர் முன்பாக செம்மையாகவும் நடந்திருக்கிறேன் என்றால், இன்னும் அதிகமாக தேவன் எதை என்னிடம் கேட்க முடியும்-? நான் மறுபடியும் பிறந்தாக வேண்டும் என்று ஜனங்கள் என்னிடம் கூறுகிறபடி, நான் ஏன் ஏதோவொரு விதமான அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும்-? உயர்ந்த நிலையில் பரிசுத்தமாய் ஜீவித்த, இந்த தலைவனிடம் இயேசு ஏன் அவ்வாறு கூறினார். அது கேட்டுக்கொள்ளப்பட்டதோ இல்லையோ, ஆனால் அவன் நிச்சயமாக மறுபடியும் பிறந்தாக வேண்டும் என்று கட்டளையிடப்பட்டதே.... 13. எனவே, இப்பொழுது ஒரு கால்வீனிய நம்பிக்கைக்குள் நெருக்கியடித்துக் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டாம் (உங்களுக்குப் புரிகிறதா-?), நான் அப்படிப்பட்டவன் அல்ல. நான் இதைக் கூறிக்கொண்டிருக்கையில் நான் லீகலிஸ்ட் ஜனங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை அறிவேன். அது எவ்விதத்திலும் அதுவல்ல, ஏனென்றால் நானும் கூட ஒரு லீகலிஸ்டாக இருக்கிறேன். ஆனால் நான் இதை விசுவாசிக்கிறேன், கால்வின் ஏதோ ஓன்றைக் கொண்டிருந்தார், அவ்விதமே ஆர்மீனியனும் ஏதோவொன்றைக் கொண்டிருந்தான். அவர்கள் இருவருமே ஏதோவொன்றைக் கொண்டிருந்தார்கள், ஆனால் அவர்களோ அதன் அடி ஆழத்துக்கு ஓடிப்போய் விட்டார்கள். கால்வீனியன், "நல்லது, நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன், அதோடு அது முடிவு பெறுகிறது" என்று கூறுகிறான். அவன் அவ்வாறு இல்லை என்று அவனுடைய ஜீவியம் நிரூபிக்கிறது, அப்படியானால் அவன் இரட்சிக்கப்பட்டிருக்கவில்லை. லீகலிஸ்ட்டோ, 'நான் இதைச் செய்தாக வேண்டும், நான் நிச்சயமாக இதைச் செய்தாக வேண்டும், நான் நிச்சயமாக அதைச் செய்தாகவேண்டும்” என்று கூறுகிறான். அதன் பிறகு நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கவில்லை என்றால், நீங்கள் இன்னும் இரட்சிக்கப் பட்டிருக்கவில்லை; எனவே அங்கே தான் காரியம். புரிகிறதா-? அது இடையே, பாதையின் நடுவில் தான் உள்ளது, அங்கே தான் நாம் தரித்திருக்க வேண்டும். 14. நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள், கால்வீனிசம் என்பது என்ன, கிருபை என்பது என்ன, அது தேவன் உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதாக இருக்கிறது. ஆனால் கிரியைகள் என்பது என்ன, தேவன் கிருபையின் மூலமாக உங்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்பதன் பாராட்டுக்கு நீங்கள் தேவனுக்காக என்ன செய்கிறீர்கள் என்பதாக இருக்கிறது. அதுவே ஒட்டு மொத்தமான பதிலாக இருக்கிறது. அப்படியானால் நான் இரட்சிக்கப்பட்டிருந்தால், நான் இரட்சிக்கப்பட்டவன் போன்று ஜீவிக்கிறேன். ஆனால் நான் இரட்சிக்கப்பட்டவன் போன்று ஜீவித்து இரட்சிக்கப்படாமலும் இருக்க முடியும். பாருங்கள்-? எனவே அப்படியானால், நாம் மறுபடியும் பிறந்தாக வேண்டும் என்பதே இந்த இடத்தில் கொண்டுவரும்படியான உண்மையாக இருக்கிறது. எனவே மறுபடியும் பிறந்த அனுபவம் தான் நாம் யாராக இருக்கிறோம் என்று கூறுகிறது. நாம்... இருக்கிறோம் என்பதற்கு அது அர்த்தம் அல்ல. நான் சத்தமிடுவதிலும் ஆவியானவரின் எல்லா வெளிப்பாடுகளையும் ஆவியின் எல்லா அத்தாட்சிகளையும் விசுவாசிக்கிறேன், ஆனாலும் இன்னும் அதுவல்ல அது. புரிகிறதா-? அது அதிலிருந்து வித்தியாசமான ஏதோ ஓன்றாக உள்ளது. அது ஒரு - அது ஒரு புது சிருஷ்டியாக உள்ளது, இருதயத்திலுள்ள ஏதோவொன்றாக உள்ளது. அநேக நேரங்களில் ஊழியக்காரர்களாகிய நாம், மனிதரும் ஸ்திரீகளும் இருவருமே, நாம் அப்படியே, "நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும்” என்று கூறாமல் இருந்து, அதை அவ்விதமாக ஜனங்களுடைய தலைக்கு மேலாக எடுத்துக்கொண்டு போய் விடுகிறோமா என்று வியப்படைகிறேன். நாம் இந்த இடத்திற்கு திரும்பி வரவேண்டி இருக்கும் போது, ஒரு பிறப்பு என்றால் என்ன அர்த்தம் என்று அவர்களை அறியச் செய்யுங்கள். புரிகிறதா-? அது வார்த்தைகளைக் காட்டிலும் இன்னும் அதிகமான ஏதோவொன்றுக்கு திரும்பிவர வேண்டியிருக்கிறது; அது ஒரு - ஒரு அடிப்படையான உண்மைக்கு திரும்பி வரவேண்டியிருக்கிறது, அது என்னவென்றால் மறுபடியும் பிறப்பதைக் குறித்த இந்த மகத்தான அனுபவமாகவும் அது நமக்காக எதை உண்டாக்குகிறது என்பதாகவும் இருக்கிறது. புரிகிறதா-? 15. இப்பொழுது, நாம் அநேக நேரங்களில், "நல்லது, நாம் மறுபடியும் பிறந்தால், நாம் சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்வோம், சத்தமிடுவோம், அந்நிய பாஷைகளில் பேசுவோம், அல்லது ஏதோவொரு விதத்தில் தேவனை வெளிப்படுத்துவோம், அது தான் அது" என்று நினைக்கத் தொடங்குகிறோம், ஆனால் சகோதரர்களே, அது அதுவல்ல என்று ஊழியக்காரர் களாகிய நீங்களே அறிவீர்கள். இப்பொழுது, ஜனங்கள் குதித்துக்கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும், நடனமாடிக் கொண்டுமிருந்தும், அவர்கள் ஏமாற்றுவதையும், திருடுவதையும், பொய் பேசுவதையும், மற்ற எல்லாவற்றையும் செய்வதையும் நாம் கண்டிருக்கிறோம் (பாருங்கள்-?), நமக்கு அது தெரியும். எனவே அவர் பேசிக்கொண்டிருந்தது அதைப் பற்றியல்ல. மார்டின் லூத்தர், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், நாங்கள் அதைப் பெற்றிருக்கிறோம்” என்று கூறின போது. ஜான் வெஸ்லி புதிதான ஏதோவொன்றோடு தொடர்ந்து வந்தார், மேலும் - மேலும் லூத்தர்.... விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று அவர் கூறின வரையில் அவர் சரியாகத்தான் இருந்தார், அவர்கள்.... அது சரி தான்; அவர்கள் விசுவாசத்தினாலே பிழைப்பார்கள். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று லூத்தர் சொன்னார், அப்படியானால் நாம் நிச்சயமாக அதைச் செய்தாக வேண்டும். அவர் அதைக் கொண்டிருப்பதாக நினைத்தார், ஆனால் அவர் அதைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் கண்டுகொண்டார். 16. நீங்கள் பரிசுத்தமாகி, சத்தமிடும்போது, அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று வெஸ்லி கூறினார், ஆனால் அவர்களில் ஏராளமானோர் சத்தமிட்டும் அதைக் கொண்டிருக்கவில்லை என்பதை அவர் கண்டுகொண்டார். நாம் அந்நிய பாஷைகளில் பேசினால், அதைப் பெற்றுக்கொண்டோம் என்று பெந்தெகோஸ்தேகாரர்கள் கூறுகிறார்கள், ஆனால் அநேகர் அந்நிய பாஷைகளில் பேசியும் அதைக் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் கண்டு கொண்டோம். அது சரியே. எனவே, சகோதரனே, அது அதிலிருந்து வித்தியாசமான ஏதோவொன்றாக உள்ளது. அது சரியே. அவர்கள் சத்தமிட்டால் என்றோ, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசினால் என்றோ, அவர்கள் இதைச் செய்தால் என்றோ இயேசு ஒருபோதும் கூறவில்லை, அவர், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் என்று சொன்னார். ஆவியின் கனியோ சத்தமிடுவதோ, அந்நிய பாஷைகளில் பேசுவதோ அல்ல. அது பரிசுத்த ஆவியின் தன்மைகள் ஆகும், நிச்சயமாக. ஆனால் அது போலியாக நடித்துக்காட்டப்பட முடியும். நமக்கு அது தெரியும். நான் என்னுடைய ஜீவியத்தில் உலகம் முழுவதும் ஏராளமான அசுத்த ஆவிகளுடனும், மந்திரவாதிகளுடனும் (witch doctors), மற்றவைகளுடனும் இடைப்பட்டிருக்கிறேன். அசுத்த ஆவிகள் சத்தமிடுவதையும், அந்நிய பாஷைகளில் பேசுவதையும், வெளிப்பாடுகள் எல்லாவற்றையும் செய்வதையும் கண்டிருக்கிறேன், அவைகள் எல்லாவிதமான அடையாளங்களையும், அற்புதங்களையும், மற்ற எல்லாவற்றையும் செய்வதையும் கண்டிருக்கிறேன். அவைகள் பிசாசுகள், அங்கே ஒரு தேவன் இருந்தார் என்பதையும் கூட மறுதலிப்பவைகள். பாருங்கள்-? ஆனால் உங்களால் அதன் மூலமாக போக முடியாது. 17. நம்முடைய உணர்ச்சிவசப்படுதலுக்கு அது வரும் போது... மேலும் நான்... ஞாபகம் கொள்ளுங்கள், எனக்கு அதில் நம்பிக்கை உண்டு; உண்மையான மார்க்கத்தைப் பெற்றிருக்கிற எவரும் சத்தமிடவோ, கொஞ்சம்..-?... உண்டாக்கிக்கொள்வார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன், ஆனால் இன்னுமாக அதைக் குறித்த எல்லாமும் அதுவல்ல. இங்கே தெற்கு பாகத்தில் இருந்த அந்த வயதான கறுப்பின மனிதனைப் போன்று, அவன் தர்பூசணியைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். தர்பூசணியின் ஒரு சீவல் துண்டை அவனிடம் கொடுக்கும்படி கேட்டு, அது எப்படி இருந்தது, பையனே-?" என்றான். அதற்கு அவன், அது நன்றாகத்தான் இருந்தது, ஆனால் அங்கே அதில் இன்னும் கொஞ்சம் மேலானது உள்ளது” என்றான். எனவே, அது இந்தவிதமாக இருப்பதற்கு அது தான் வழி, இது நன்றாக உள்ளது, ஆனால் அங்கே அதில் இன்னும் கொஞ்சம் மேலானது உள்ளது. உங்களுக்குப் புரிகிறதா-? எனவே நம்மால் இந்த ஒரு சீவல் துண்டின் மூலமாக பிழைக்க முடியாது. எனவே அங்கே வித்தியாசமான ஏதோவொன்றுள்ளது. எனவே இன்னும் அதிகமாக இதை விளக்கிக் கூற முடியும், சகோதரர்களும் ஊழியக்காரர்களுமாகிய நீங்கள்... இப்பொழுது, பிரசங்கம் பண்ணுவதற்காக இங்கே என்னுடைய சிந்தையில் இருந்த, ஜீவன் என்ற ஒரு சிறிய பொருளை (தலைப்பை) இங்கே எடுத்துக்கொள்ள என்னால் முடிந்தது. ஆனால் நான் வந்த போது, ஏதோவொன்று என்னைத் தட்டி, இந்தக் காலையில் நீ ஊழியக்காரர்களுக்கு முன்பாக இருக்கிறாய்; தங்களுடைய கரங்களில் திறவுகோல்களைப் பிடித்திருக்கிற மனிதர்களுக்கு முன்பாக நீ இருக்கிறாய். இந்த மனிதர்களுக்கு உதவி புரியும் காரியங்களைக் குறித்து உன்னால் கூடுமான வரையில் சிறந்த முறையில் பேசு” (என்றார்.) இந்த ஜனங்கள் உதவியைப் பெற்றுக்கொள்ளக் கூடும் வரையில், முழு உலகமும் உதவியைப் பெற்றுக் கொள்ளும்; உங்களுடைய சபைக் கூட்டங்களும் மற்றும் எல்லாவிடங்களிலும், அவர்கள் அதிலிருந்து உதவியைப் பெற்றுக்கொள்வார்கள். சகோதரர்களே, அவை எல்லாவற்றிற்கும் பிறகு, நாம் ஒரு ஸ்தலத்திற்காகவே வேலை செய்து கொண்டிருக்கிறோம். நம்முடைய எல்லா வித்தியாச பேதங்களும் மற்றும் எல்லாமும், நாம் இன்னும் ஒரு எஜமானருக்கே ஆத்துமாக்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்; அவர் தான் தேவன். அதற்காகத்தான் நாம் இங்கே இருக்கிறோம். 18. இப்பொழுது இந்தக் காலையில், நான் என்ன நினைக்கிறேன் என்றும், நான் ஏன் நிச்சயமாக மறுபடியும் பிறந்தாக வேண்டும் என்பதையும் உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். ஒரு எளிய வழியில் நான் அதை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். உங்களுக்கு விருப்பமானால், நாம் ஒரு சிறு பிரயாணம் செய்து, உலக தோற்றத்துக்கு முன்பு திரும்பிச் செல்வோம். இப்பொழுது, நம்முடைய சரீரங்கள் பூமியின் புழுதியிலிருந்து வந்திருக்கின்றன என்று நாம் கற்பிக்கப்பட்டுள்ளோம். மருத்துவ விஞ்ஞானம் அவ்வாறு கூறுகிறது, மேலும் வேதாகமமும் அவ்வாறு கூறுகிறது. எனவே நாம் பூமியின் புழுதியிலிருந்து வந்திருக்கிறோம் என்று அவர்கள் ஒப்புக் கொள்ளும் ஒரு காரியம் உண்டு. இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் ஒரு - ஒரு குவானிஸ் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அநேக.... யைக் குறித்த ஒரு பொருளின் பேரில் பேசிக் கொண்டிருந்தேன். அனேக ஜனங்கள், அவர்கள் - அவர்கள் எதை விசுவாசிக்கிறார்கள் என்றும் மேலும் மற்றவைகளைக் குறித்தும் (பேசிக் கொண்டிருந்தேன்), மேலும் நம்முடைய சரீரங்கள் எங்கிருந்து வந்தன என்பதைக் குறித்த இந்த சிந்தனை இதில் வருகிறது. நான் மருத்துவரிடம் கேட்டேன். நான், "டாக்டர், நான் உம்மிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்" என்றேன், (அவர்) அந்தக் கூட்டத்தில் இருந்தார், என்னுடைய சரீரம் மண்ணிலிருந்து வந்தது என்பது உண்மை தானா-?” என்று கேட்டேன். அவர், "சங்கை அவர்களே, நீர் ஏன் அதை அறிந்து கொள்ள வேண்டும்-?” என்றார். நான், ஆமாம், ஆனால் அது எப்படி மண்ணிலிருந்து வந்தது என்று அறிய விரும்புகிறேன்” என்றேன். "ஏன்,” அவர், "நீங்கள் புசிக்கும் உணவின் மூலமாக. நீங்கள் ஆகாரத்தைப் புசிக்கிறீர்கள், அது இரத்த அணுக்களாக ஆகிவிடுகிறது" என்றார். 19. "நல்லது,” நான், "அப்படியானால் அது சரியென்றால், நான் இன்னும் அதிகமாக புசிக்கும் போது, நான் எனக்குள்ளே இன்னும் அதிகமாக மண்ணை வைக்கிறேன், அப்பொழுது பெரியவனாகவும் பலமுள்ளவனாகவும் ஆகிறேன். ஒரு - ஒரு கூஜாவிலிருந்து ஒரு கண்ணாடிக் குவளைக்குள் தண்ணீரை ஊற்றுவதைப் போன்றோ, அல்லது பொருளை வைப்பது போன்றோ, ஒரு குவியலான பொருளை வைப்பது போன்றோ, அல்லது மற்றவைகளைப் போன்றோ (அது இருக்கிறது); நான் அதற்குள்ளே இன்னும் அதிகமாக வைக்கும் போது, பெரியவனாகவும் பலமுள்ளவனாகவும் இருப்பேன்” என்றேன். அது சரியே” என்றார். "அப்படியானால் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். எனக்கு பதினாறு வயதோ, பதினேழு வயதோ, அப்படியே வந்து, ஏறக்குறைய 25 வயது மட்டுமாக இருந்த போது, அது எப்படியிருக்கிறது, நான் இப்பொழுது புசிப்பது போன்றே, நான் ரொட்டியும், மாமிசமும், உருளைக் கிழங்கும், மற்றவைகளையும் புசித்தேன்; அவைகள் இரத்த அணுக்களாக மாற்றப்பட்டது” என்றேன். "அது சரிதான்.” நான், "ஏன் அது அப்படியிருக்கிறது, அப்போது நான் புசித்தது போன்றே அதே காரியத்தையே இப்பொழுதும் நான் புசிக்கிறேன், ஆனால் நான் அவைகளைப் புசித்தபோது, நான் எல்லா நேரமும் பெரியவனாகவும் பலமுள்ளவனாகவும் ஆனேன். எனக்கு ஏறக்குறைய 25 வயதான போது, நான் அதைக் காட்டிலும் இன்னும் அதிகமாகப் புசித்தேன், சிறந்ததையும் புசித்தேன்; நானோ வயதாகவும், பலவீனமாகவும், கீழான நிலைக்கும் போய்க் கொண்டிருக்கிறேன்" என்றேன். அது ஏன் அப்படியிருக்கிறது, நான் ஒரு கூஜாவிலிருந்து ஒரு - ஒரு கண்ணாடிக் குவளைக்கு தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தால், அது ஏறக்குறைய பாதி நிரம்பும் வரையில் நிரம்பிக்கொண்டேயிருக்கிறது, அதன்பிறகு இன்னும் அதிகமாகவும், வேகமாகவும் நான் ஊற்ற அது வேகமாக கீழே தான் போகிறது; விஞ்ஞானப்பூர்வமாக, அது எப்படி செய்யப்பட்டது என்று எனக்குச் சொல்லுங்கள். அது செய்யப்பட முடியாது. 20. ஆனால் வேதாகமத்தில் பதில் உள்ளது. தேவன், மனித இனத்தோடு செய்திருக்கிற ஒரு நியமனமாக அது இருக்கிறது. நீங்கள் ஒருமுறை... நீங்கள் இங்கேயிருக்கிறீர்கள், அதன்பிறகு நீங்கள் கட்டாயம் இங்கிருந்து போயாக வேண்டும், தேவன் தம்முடைய படத்தை எடுக்கிறார். நான் இந்தக் காலையில் புராணகதை சார்ந்ததாக வைக்கப் போகிறேன், மிகவும் வயதான மனிதனும் பெண்ணும் இந்தக் காலையில் எனக்கு முன்பாக இங்கே இந்தக் கூட்டத்தில், கணவனும் மனைவியுமாக இருக்கிறார்கள். ஒரு சில வருடங்களுக்கு முன்பு, நீங்கள் அழகான வாலிப பெண்ணாகவும், அம்மனிதர் ஒரு அழகான வாலிபனாகவும் இருந்தார்கள். ஒருக்கால் (அப்போது) நீங்கள் உங்கள் ஊழியத்தில் பிரவேசித்திருக்கலாம். அன்னை அழகாக இருந்தாள், நீங்கள் பீடத்தண்டை அவளை வழி நடத்தின அந்த நாள் எப்படியிருந்தது, அவளை உங்கள் மனைவியாகவும், சட்டப்பூர்வமாக விவாகம் பண்ணப்பட்ட மனைவியாகவும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்று அந்த தேவனுடைய ஊழியக்காரர் கூறினார், நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தீர்கள். நல்லது, நீங்கள் இங்கே இந்தக் காலையில் புசித்த அதே உணவையே நீங்கள் புசித்துக் கொண்டு இருந்தீர்கள். மேலும் நீங்கள்... நீங்கள் விவாகம் பண்ணி ஒரு சில வருடங்கள் கழித்து, ஒரு காலையில் நீங்கள் எழுந்த போது, வயதான அன்பே, அங்கே அந்த அழகான கண்களுக்குக் கீழே சுருக்கம் வந்து கொண்டிருக்கிறது" என்றீர்கள். அவளும், ஆமாம், தகப்பனாரே, உமது ஆலயத்திற்குள்ளும் நரைத்த தலைமயிர் வந்து கொண்டிருப்பதை நான் கவனித்து வருகிறேன்" என்று கூறினாள். அது ஏறக்குறைய முதல் குழந்தை பிறந்த போது. 21. என்ன சம்பவித்தது-? மரணம் வரத்தொடங்கி விட்டது. அது உங்களில் அநேகரை ஒரு மூலையில் வைத்து விட்டது, ஆனால் சீக்கிரத்தில் அது உங்களை ஒரு மூலையில் வைத்து, அங்கேயே உங்களை வைக்கப் போகிறது. பாருங்கள்-? ஏனென்றால் அது உங்களை எடுக்கப் போகிறது. இனிவரும் வாழ்வில் அவர் உங்களை எப்படியிருக்க விரும்பினாரோ, அந்த நிலையான அவருடைய படத்தை தேவன் கொண்டிருந்தார். இப்பொழுது, நான் உயிர்த்தெழுதலை விசுவாசிக்கிறேன். கிறிஸ்தவமானது உயிர்த்தெழுதலை விசுவாசிக்கிறது. முழு காரியமும் உயிர்த்தெழுதலையே அடிப்படையாகக் கொண்டது. இப்பொழுது அநேக ஜனங்கள், தாங்கள் இவ்விதமாகக் கீழே சென்று, செட்டைகளை உடைய பறந்து கொண்டிருக்கும் ஏதோவொரு விதமான ஆவியாக திரும்பி வருவார்கள் என்பதாக எண்ணிக் கொள்கிறார்கள். நீங்கள் இப்பொழுது இருப்பதைப் போலவே, மனிதர்களும் ஸ்திரீகளுமாகவே திரும்ப மேலே வருவீர்கள். அந்த விதமாகத் தான் இது... இந்த வேதாகமமானது மேடையிலிருந்து கீழே இந்த மேஜையில் விழுந்து, வேறொரு வேதாகமத்தை எடுத்து, அதனுடைய இடத்தில் வைப்பீர்களானால், அது உயிர்த்தெழுதல் அல்ல, அது மாற்றீடாக இருக்கிறது. உயிர்த்தெழுதல் என்பது கீழே சென்ற அதே வேதாகமத்தையே மேலே கொண்டு வருவதாகும். உயிர்த்தெழுதல் என்பது கீழே போன அதே நபரையே மேலே கொண்டு வருவதாகும். அப்படியானால் உயிர்த்தெழுதலில், எல்லா... சில...-?... 22. இப்பொழுது இந்தக் காலையில் நீங்கள் வயதானவர்களாகவும், நரைத்த தலைமயிரைக் கொண்டவர்களாகவும், சரிந்த தோள்களை உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். மேலும் தாயானவள், வழக்கமாக உங்களுக்கு இல்லாத நிறைய நிறைய வலிகளும், வேதனைகளும் மற்றும் காரியங்களும் உங்களுக்கு இருக்கின்றன, அது - அது மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், உங்களை பூமியின் மேல் கொண்டு வந்த அதே தேவனையே நீங்கள் இன்னும் சேவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படியானால் அதெல்லாமே இந்த விதத்தில் நீங்கள் வரும்படி செய்யும் தேவனுடைய நோக்கத்தில் அது இருந்தாக வேண்டும். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், உயிர்த்தெழுதலில், நீங்கள் நரைத்த தலைமயிரையோ சுருக்கத்தையோ கொண்டிருக்க மாட்டீர்கள். உங்களுக்கு செய்வதற்கு மரணமானது வைத்திருக்கிற எல்லாமே உயிர்த்தெழுதலில் மறக்கப்பட்டு விடும். (painted), அவர், "அங்கே அவர்கள் இருக்கிறார்கள். இப்பொழுது, மரணமே வா, ஆனால் நான் உன்னை அதைச் செய்ய அனுமதிக்கும் வரையில் நீ அவர்களை எடுத்துக் கொள்ள முடியாது என்றார். அதன் பிறகு நீங்கள் புழுதிக்குள் சென்று, மறுபடியும் எழும் போது, அந்தக் காலையில் நீங்கள் பீடத்தண்டையில் இருந்த அதே அழகான ஜோடிகளாக திரும்பி வருவீர்கள், அந்த விதமாகவே என்றென்னும் தொடர்ந்து இருக்கும்படியாக திரும்பி வருவீர்கள். எனவே நாம் எதைக் குறித்து பயப்பட வேண்டும்-? 23. கொஞ்ச காலத்திற்கு முன்பு, யாரோ ஒருவர் என்னிடம், "பில்லி.., என்று என்னிடம் கூற வருகிறீரா," என்றார். நான் ஆபிரகாமின் பேரில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், அவனிடம் வந்த அந்தத் தூதர்கள், அவனிடம் பேசினது, நான், அது தேவனும் இரண்டு தூதர்களுமாயிருந்தது” என்றேன். அவர், "அது தேவன் மாம்ச சரீரத்தில் இருந்தது என்று என்னிடம் கூறக் கருதுகிறீரா-?” என்று கேட்டார். நான், "நிச்சயமாக, அவ்வாறு தான். அது ஒரு தியோபனி அல்ல; அது தேவனாக இருந்தது. அது மாம்சத்தில் இருந்த ஒரு மனிதனாக இருந்தது, அவர் தேவனாக இருந்தார்,” என்றேன். அவர், அப்படியானால் நான் உம்மிடம் இதைக் கேட்க விரும்புகிறேன், அவருக்கு அந்த சரீரம் எப்படி கிடைத்தது-?” என்றார். 24. நான், "நல்லது, வானங்களையும் பூமியையும் உண்டாக்கின அந்த மகத்தான சிருஷ்டிகர்," என்றேன். நாம் பதினாறு தனிமங்களினால் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்; அது சாம்பல் உப்பு, பெட்ரோலியம்கள், காஸ்மிக் வெளிச்சம், கால்சியம், அதைப் போன்றவைகளால் உண்டாக்கப்பட்டிருக்கிறோம், ஏன், அவரால் அந்த 16 தனிமங்களை எடுத்து, அவைகளை ஒன்றாக phfff, ஊதி, "காபிரியேல், இங்கே வா, அதற்குள் ஏறிக்கொள்” என்று கூறிவிட்டு, ஒன்றை மிகாவேலுக்காகவும், ஒன்றைத் தமக்காகவும் உண்டாக்கினார்.... ஏன், நிச்சயமாகவே அவர் செய்தார். அதன்பிறகு ஒரு நொடிப்பொழுதில் (a second) மறைந்து போய் விட்டார்கள். அவர் தான் என்னுடைய பிதாவாக இருக்கிறார். இந்த சாம்பல் உப்பிற்கும் கால்சியத்திற்கும், என்ன சம்பவித்தாலும் அது காரியமில்லை, அது எங்கே கிடக்கிறது என்று சரியாக அவருக்குத் தெரியும். கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் ஒரு கண்ணாடிக்கு முன்பாக நின்று கொண்டு, எனக்கு மீதியாயிருக்கும் இந்த சில தலைமுடிகளை வாரிக்கொண்டிருந்தேன். என்னுடைய மனைவி என்னிடம் கூறினாள், அவள், "பில்லி, நீர் ஏறக்குறைய முற்றிலுமாக வழுக்கைத் தலையாகி விட்டீர்” என்று நான், ஆனால் நான் அவைகளில் ஒன்றையும் இழக்க வில்லை” என்றேன். அவள், அவைகள் எங்கேயிருக்கின்றன என்று என்னிடம் கூறும்படி கேட்கிறேன்" என்றாள். நான், "நீ எனக்குப் பதில் சொல்லும்போது, நான் உனக்குப் பதிலளிப்பேன். நான் அவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பு, அவைகள் எங்கேயிருந்தன என்று என்னிடம் கூறு. அங்கே தான் அவைகள் எனக்காக காத்துக் கொண்டிருக்கின்றன என்று உன்னிடம் சொல்லுவேன்” என்றேன். 25. அவைகள் இருக்குமானால், அவைகள் இருக்கும் முன்பே அவைகள் இருந்தன. அவைகள் இந்த பூமியின் மூலப்பொருட்களிலிருந்து வந்திருக்க வேண்டியிருந்தது. அதன் பிறகு நான் இங்கே வருவதற்கு முன்பே, அவைகள் இங்கேயிருந்தன, நான் போன பிறகும் அவைகள் இங்கே இருக்கும். ஆனால் ஏதோவொரு நாளில், எங்கள் இருவரையுமே தேவன் உயிர்த்து எழச்செய்வார், வழக்கமாக நீண்ட காலத்திற்கு முன்பு, வாலிபனாக இருந்தது போல, நாங்கள் ஒன்றாக வருவோம். இதற்குள் பிரவேசி, அதற்குள் பிரவேசி" என்று கூறக்கூடிய என்னுடைய பிதாவானவர், ஏதோவொரு நாளில் அவர் என்னுடைய ஆத்துமாவையும், உங்கள் ஆத்துமாவையும் எடுத்துக் கொள்வார், நாம் என்றென்றுமாக ஜீவிக்கும்படியாக, நாம் ஒரு வாலிபனாகவும் வாலிப பெண்ணாகவும் மீண்டும் திரும்ப பின்னோக்கி அடியெடுத்து வைப்போம். இப்பொழுது, தேவன் ஒரு Sears and Roebuck, Harmony House - ஆக இல்லை (1940ம் ஆண்டில், Sears ஆனது ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்ததாய் இருக்கக்கூடிய 4 அடிப்படை வண்ணங்களை பயன்படுத்தும் உட்புற அலங்கார திட்டமாக (interior-decorating scheme)-ஆக Harmony House என்ற வணிகச் சின்னத்தை அறிமுகப்படுத்தியது - மொழிபெயர்ப்பாளர்.) அவர் நம்மை வித்தியாசமாக தோற்றமளிக்கும்படியாக உண்டாக்குகிறார். அவர் காரியங்களை வித்தியாசமாகச் செய்கிறார். அவர் பெரிய மலைகளையும் சிறிய மலைகளையும் உண்டாக்குகிறார். அவர் நெலிங்க மர வகைகளையும், கருவாலி மரங்களையும், பனை மரங்களையும் உண்டாக்குகிறார். அவர் புதர்களையும், பெரிய மரங்களையும் உண்டாக்குகிறார். அவர் நதிகளையும், பாலைவனங்களையும், பெருங்கடல்களையும், சமவெளிகளையும் உண்டாக்குகிறார். அவர் சிவப்பு தலைமயிரைக் கொண்டவர்களையும், வெள்ளைத் தலைமயிரை உடையவர்களையும், பழுப்பு தலைமயிரைக் கொண்டவர்களையும், கறுப்பு தலை மயிரை உடையவர்களையும், சிறிய, குட்டையான, பெருத்த, அலட்சியமாக இருப்பவர்களையும் உண்டாக்குகிறார். பாருங்கள்-? அவர் அவர்களை அந்தவிதமாக உண்டாக்குகிறார். ஏனென்றால் அதைத் தான் அவர் விரும்புகிறார். அவர் என்னவாக இருக்கிறார் என்றும் அவர் எப்படியிருக்கிறார் என்றும் அவருடைய சொந்த சுபாவமே நிரூபிக்கிறது. 26. இப்பொழுது அவர்கள்... குறித்துப் பேசுகிறார்கள். இங்கேயிருக்கும் ஜனங்களாகிய உங்களில் அநேகர் ஃபுளோரிடாவிலிருந்து வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு அற்புதமான இடம் உள்ளது, ஆனால் எனக்கு என்ன தலைமயிர் மீதியாக உள்ளது என்று நான் அக்கறை எடுத்துக்கொள்வதைக் காட்டிலும் நீங்கள் உங்கள் புல்வெளியைக் குறித்து அதிகமாக அக்கறை எடுத்துக்கொள்கிறீர்கள், அதை எல்லா நேரமும் மெல்லிய கூர்மையான முனையாக ஆக்கிக்கொண்டிருந்து (feather-edging), அதை அப்படியே மென்மையாகவும், மேலும் இந்த விதமாகவும் அந்த விதமாகவும் வைத்திருக்கிறீர்கள். இப்பொழுது, அது மனிதக்கண்களுக்கு அழகாக இருக்கலாம், ஆனால் எனக்கோ, காடென்றால் எனக்குப்பிரியம், மலைகளின் உச்சி, அங்கே தேவன் அதை உண்டாக்கின விதமாக அவள் கரடுமுரடாக இருக்கிறாள், அது தாறுமாறாக்கப்படுவதற்கு முன்பு அதை அவர் காண விரும்புகிற விதமாக அது இருக்கிறது. தேவன் காரியங்களைச்செய்கிற விதம் எனக்குப் பிடிக்கும். அவர் ஜனங்களை உண்டாக்குகிற விதம் எனக்குப் பிடிக்கும். அவர் ஒரு... ஐ உடையவராயிருக்கிறார். அவர் விரும்புகிறார்... அவர் பல வகையாக இருப்பதைக் கொண்ட ஒரு தேவனாக (God of variety) இருக்கிறார். அவர் சிவப்பு மலர்களையும், வெள்ளை மலர்களையும், நீல நிற மலர்களையும் உண்டாக்குகிறார்; அந்த விதமாகத் தான் அவர் மனிதகுலத்தையும் உண்டாக்குகிறார். அந்தவிதமாகவே நாம் உயிர்த்தெழுதலில் இருப்போம். 27. நீங்கள் வயலட் (violets) செடியை எடுத்து, அவைகளை கலப்பினம் செய்கிறீர்கள், அவைகளைத் தனியே விட்டு விடுங்கள், அப்போது அவைகள் தங்களுடைய மூலமுதலான வயலெட் செடிக்குத் திரும்பிப் போய் விடும். கால்நடைகளை வளர்க்கிறவர்களாகிய உங்களில் சிலர், நீங்கள் ஒரு பெண் குதிரையை ஒரு கோவேறு கழுதைக்கு இனப்பெருக்கம் செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும்; கோவேறு கழுதையை மறுபடியும் திரும்ப இனப்பெருக்கம் செய்ய முடியாது; நீங்கள் மீண்டும் அதனுடைய மூலமுதலானதற்கு திரும்பிப் போக வேண்டும். அந்த விதமாகத்தான், அது உயிர்த்தெழுதலிலும் இருக்கும், நாம் மூலமுதலானதற்குத் திரும்பிச் சென்று, தேவன் ஏதேன் தோட்டத்தில் மனிதனைத் தம்முடைய சாயலாக உண்டாக்கின போது, மனிதன் எப்படியிருந்தானோ அதற்கு நாம் திரும்பிச் செல்வோம். அவன் ஒரு மனிதனாக இருப்பான்; அவள் ஒரு பெண்ணாக இருப்பாள். அவளை அழகாக தோற்றமளிக்கச் செய்ய அவளுக்கு மாக்ஸ் ஃபாக்டர்ஸ் அழகு சாதன பொருட்கள் அவசியம் இருக்காது; அவள் துவக்க முதலே அழகாயிருப்பாள். அவள்...... இப்பொழுது கவனியுங்கள், இவை எல்லாமே எப்படி சம்பவித்தன-? இப்பொழுது, நாம் பூமியின் மண்ணிலிருந்து வந்திருந்தால், நாம் அவ்வாறு தான் வந்திருக்கிறோம் என்று வேதாகமம் கூறுகிறது. விஞ்ஞானமும் கூட நாம் பூமியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறோம் என்று கூறுகிறது. அப்படியானால் நிச்சயமாகவே, இது ஒரு சிறு (speck) ஜீவனும் இன்றி இன்னுமாக ஒரு எரிமலை வெடிப்பாக இருந்த போது, நம்முடைய சரீரங்கள் இந்த பூமியின் மேல் கிடந்தன. அது அவ்வாறு இல்லை என்றால், அது எங்கிருந்து வந்தது-? 28. இந்தக் காலையில் நீங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கும் அந்த சரீரமானது, ஒரு மிகச்சிறிய ஜீவனும் எப்பொழுதாவது பூமியின் மேல் வைக்கப்படுவதற்கு, 10,000 வருடங்களுக்கு முன்பே இங்கே இருந்தது. அதோ அங்கே வெளியே தொங்கிக் கொண்டிருந்த இந்தப் பழைய ஏவுகணையை தேவன் உடையவராய் இருந்த போது, அவர் அதை சூரியனைச் சுற்றிலும் சுழன்று வரச்செய்து (turning), இந்த விதமாக அதைச் சுற்றி வரச் செய்து, அங்கே உள்ளே கால்சியத்தையும், பொட்டாஷையும், பெட்ரோலியத்தையும், அதைப்போன்று மற்றவை களையும் உண்டாக்கிக் கொண்டிருந்தார், அப்போது அவர், நீங்கள் இக்காலையில் இந்த மேஜையில் உட்கார்ந்து கொண்டிருப்பீர்கள் என்ற தம்முடைய மகத்தான சிந்தையைக் கொண்டிருந்தார். ஓ, அல்லேலூயா, அவர் முடிவற்ற தேவனாக இருக்கிறார். ஒரு தச்சு வேலை செய்பவர் ஒரு வீட்டைக்கட்டப் போகும் போது, அவர் எப்படி அதைச் செய்கிறார்-? முதலில் அவருடைய (அறுத்த) பலகை எல்லாவற்றையும் ஆயத்தமாக வைக்கிறார். அவர் எதைக்கட்டப் போகிறார் என்பதை தம்முடைய சிந்தையில் வைத்திருக்கிறார்.., தேவன் கொண்டிருந்தார். உலகமானது அதன் மேல் ஒரு ஜீவனையும் எப்பொழுதாவது கொண்டிருப்பதற்கு முன்பே, சரியாக அங்கே கிடக்கிற உங்களுடைய சரீரத்தை அவர் உடையவராயிருந்தார். அது அவ்வாறு இல்லாவிட்டால், அது எங்கிருந்து வந்தது-? ஆகையால் தான் அவர் அதை சுழற்றி, சுற்றி சுற்றி வரும்படி செய்து, சுழன்று வரும்படி செய்தார். அவர் அதை சூரியனுக்கு இந்த விதமாகக் கொண்டிருந்தார், அது பொட்டாஷை உண்டாக்கிற்று, அவர் அதை இந்த விதமாக திருப்பி சுழற்றினார், அது கால்சியத்தை உண்டாக்கினது. அவர் அதை இவ்விதமாக திருப்பி சுழற்றினார். அது பெட்ரோலியத்தை உண்டாக்கினது. ஓ, அவருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 29. நாம் எதைக் குறித்து பயப்பட வேண்டும்-? நாம் அங்கே எங்காவது (இருப்பதிலேயே) அடிமைப்படாமல் இருக்கும் மிகவும் விடுதலையான ஜனங்களாகவும் மிகவும் சந்தோஷமான ஜனங்களாகவும் இருக்க வேண்டும். நாம் அதைக் குறித்து ஊகிக்க வேண்டியதில்லை; தேவன் நம் மத்தியில் இருந்து அதை நிரூபிக்கிறார். அது சரியே. இது அவருடைய வார்த்தையின் படியும் அவருடைய ஆவியின் படியும் இருக்கிறது. இப்பொழுது இதை எடுத்துக் கொள்வோம். நம்முடைய சரீரங்கள், பூமியானது உருவாக்கப்பட்டு முடிக்கக் கூட ஆகும் முன்பே, சரியாக இப்பொழுது நாம் ஜீவித்துக் கொண்டிருக்கும் நம்முடைய சரீரங்கள், பூமியின் மேல் கிடந்தன: பொட்டாஷ், கால்சியம், பெட்ரோலியம், அதைப் போன்ற மற்றவைகள். இப்பொழுது, நாம் ஒரு சிறு காட்சியை எடுத்துக்கொள்வோம், அப்பொழுது நாம் அதைத் தவற விட்டு விட மாட்டோம். பூமியானது உருவாகி, அதிலுள்ள எல்லாமே வெறும் ஒரு - ஒரு மங்கின பாலைவனமாக அங்கே கிடந்த பிறகு, அதின் மேல் ஒருபோதும் ஜீவனே இல்லாதிருந்தது, ஜீவனென்று அழைக்கப்படும் எதுவுமே ஒருபோதும் இல்லாதிருந்தது, ஆனால் நம்முடைய சரீரங்களை உருவாக்குவதற்கான பொருட்கள் எல்லாமே அங்கே கிடந்தன. தேவன் மகத்தான பூமியின் மேல் அடைகாக்கவும்” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. இப்பொழுது, அடைகாப்பது' என்ற வார்த்தையானது, "பெட்டைக்கோழி தன்னுடைய குஞ்சுகளுக்குச் செய்வது போன்று, கவனித்துக் கொள்வது, அல்லது – அல்லது புறாவானது அதனுடைய துணையை அழைப்பது போன்று கூவென்று ஒலி எழுப்புவதற்கு” என்று நமக்குத் தெரியும். "போய் பூமியின் மேல் அடைகாக்கவும்." 30. இப்பொழுது, ஒரு நாடகத்தை நடத்துவது போன்று, இங்கே ஒரு கற்பனையை உபயோகிக்க வேண்டியிருக்கும். அதன் பிறகு மகத்தான பரிசுத்த ஆவியானவர் புறப்பட்டுச் சென்று, பூமியின் மேல் தம்முடைய சிறகுகளை விரித்து, ஒரு நோக்கத்திற்காக அடைகாக்கத் துவங்கினார். தேவன் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதை வருமுன் கூறுவதற்காக அது ஏதோவொன்றை சம்பவிக்கப்பண்ண (bring forth) வேண்டியிருந்தது. நான் அன்றொரு இரவு, யார் முதலாவது இருந்தது, ஒரு பாவியா அல்லது ஒரு இரட்சகரா-?" என்று கூறினபடி. எப்படியும் இவை எல்லாவற்றையும் குறித்து என்ன-? யார் முதலாவது இருந்தது, ஒரு -ஒரு சுகமளிப்பவரா அல்லது வியாதியா-? ஏன், நிச்சயமாக ஒரு சுகமளிப்பவர் தான்.... நல்லது, ஏன் செய்தார் - அப்படியானால் எப்பொழுதாவது நாம் ஏன் பாவிகளாக ஆனோம்-? அது அந்த விதமாக இருக்க வேண்டியிருந்தது. தேவன் ஒரு இரட்சகராக இருப்பாரானால், இரட்சிக்கும்படியாக அவர் ஏதோவொன்றைக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. எனவே அங்கே தவறு ஏதுமில்லை; அதெல்லாமே அவருடைய வழியில் கிரியை செய்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது, நான் - இதைப் பாவிகளிடம் கூற முடியாது; நான் இதை ஊழியக்காரர்களிடமும் தேவனுடைய பிள்ளைகளிடமும் கூறிக் கொண்டிருக்கிறேன் (பாருங்கள்-?). அதெல்லாமே சரியாகவே கிரியை செய்து கொண்டிருக்கின்றன, நாம் என்ன செய்தாலும், அல்லது என்ன செய்யா விட்டாலும் காரியமில்லை; அது சரியாகத் தான் வெளியே போகப் போகிறது. ஏனென்றால் தேவன் எதை முன்னறிந்தாரோ, அவர் முன் தீர்மானித்திருக்கிறார். இப்பொழுது கவனியுங்கள், அதன் பிறகு அது இருக்கிறபடியே, அது சுற்றிலும் அசைந்து கொண்டிருக்கையில். அது சரியாக வெளியே வந்து கொண்டிருக்கிறது, நாம் கவலைப்பட எந்த அவசியமுமில்லை, ஏனென்றால் அது சரியாகவே இருக்கப்போகிறது. 31. இப்பொழுது, தேவன்... அங்கே... நாம் பகல் நேரத்தில், வெளிச்சத்தைக் கொண்டிருந்தால், அங்கே ஒருபோதும் எந்த வெளிச்சமும் இல்லை என்றால், என்னவாகும், அப்படியானால் பகல் நேரம் எப்படியிருக்கும் என்று உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்-? பகல்... எப்படி முடியும். நீங்கள் ஒருபோதும் நோய்வாய்ப்படவே இல்லை என்றால், உடல் ஆரோக்கியத்தை எப்படி அனுபவிப்பது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்-? நீங்கள் ஒரு போதும் இழக்கப்பட்டு போகாதிருந்தால், இரட்சிக்கப்பட்டிருப்பதை அனுபவிப்பது உங்களுக்கு எப்படி தெரியும்-? ஏன், சகோதரனே, ஏதோவொரு நாளில், இயேசு வந்து, உயிர்த்தெழுதல் (நடக்கும் போது, தேவன் இந்த உலகத்திற்கு நீதியைக் கொண்டு வரும் போது, இந்த பூமியின் மண்ணில் நித்திரை செய்யும் ஒவ்வொருவரும் அவருடைய பிரசன்னத்தில் உயிர்த்தெழுவார்கள், நாம் வல்லமையோடு பத்து இலட்சக்கணக்கானவர்களாக இந்த பூமியைச் சுற்றிலும் நின்று, மீட்பின் கதைகளைப் பாடிக் கொண்டிருப்போம், தூதர்கள் தலைகளை வணங்கினபடி, வெளியே ஒன்றாகக் கூடியிருப்பார்கள், அப்போது நாம் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாதிருப்பார்கள். அவர்கள் இழக்கப்பட்டிருக்கவில்லை; இரட்சிக்கப்படுவது என்றால் என்ன அர்த்தம் என்று அவர்களுக்குத் தெரியாது. இழக்கப்படுவது என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்றும், இரட்சிக்கப்படுவது என்றால் என்ன அர்த்தம் என்றும் நமக்குத் தெரியும். நமக்கு ஒரு பிதா இருக்கிறார். 32. இயேசு ஒரு பிசாசை துரத்தும் போது, அதைத் தம்முடைய விரலினாலே துரத்தினார் என்று அவர் கூறினதை எப்பொழுதாவது நீங்கள் கவனித்திருக்கிறீர்களா. இயேசு, நான் தேவனுடைய விரலினாலே - தேவனுடைய விரலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்தினால்..." என்று கூறி இருந்தால். ஒரு பிசாசு அவருக்கு என்னவாயிருக்கிறான் என்று பார்க்கிறீர்களா-? சுகம் அளித்தலுக்காக; அது வெறுமனே ஒரு சிறிய காரியமாக உள்ளது. ஆனால் கவனியுங்கள் ஒரு - ஒரு செம்மறியாடு வழி தவறிப்போன போது, அவர் என்ன செய்தார்-? அவர் சென்று, அந்த செம்மறியாட்டைப் பிடித்து, அதைத் தம்முடைய தோள்களின் மேல் வைத்துக் கொண்டார். மனிதனுடைய மிக பலமான பாகம் எது-? அவனுடைய முதுகும் அவனுடைய கால்களும் தான். பாருங்கள், பிசாசு அவருக்கு ஒன்றுமேயில்லை. ஆனால் அந்த செம்மறியாடோ, அவர் அதை தம்முடைய தோள்களின் குறுக்காக வைத்து, அதனுடைய கால்களைப் பற்றிப்பிடித்துக் கொண்டார். அவர் அதைத் திரும்ப தொழுவத்திற்குள் சேர்க்கும் வரையில், அவர் அதைத் தம்முடைய சரீரத்தின் பலத்தைக் கொண்டு அதை சுமந்து கொண்டு வருகிறார். தேவன் தம்முடைய பிள்ளைகளை நேசிக்கிறார். 33. இப்பொழுது, அவர் அவைகளை எவ்வாறு பெற்றுக்கொண்டார்-? பரிசுத்த ஆவியானவர் புறப்பட்டுச் சென்று, பூமியின் மேல் அடைகாத்தார். அவர் அடைகாத்து, கொஞ்சுதலைத் (cooing) தொடங்குகையில்.... நாம் பேசுதலின் நிமித்தமாக இவ்வாறு கூறுவோம், அவர்.... போய்க் கொண்டிருந்தார். சாயங்கால புறாவானது, அது உட்கார்ந்து தன்னுடைய துணையை கொஞ்சிக் கொண்டிருக்கும் போது, இருப்பதைப் போன்று, அவர் அழைத்து, கொஞ்சிக் கொண்டிருந்தார். எரிமலை வெடிப்பின் மங்கின பாலைவனமே தவிர வேறு எதுவாகவும் இல்லாமல் இருந்ததின் மேல் அவர் மென்மையான ஒலியை எழுப்பத் (coo) துவங்குகையில், அங்கே கீழே வந்து கொண்டிருக்கும் அந்த மலையைப் பாருங்கள். கொஞ்சம் கால்சியத்தின் மேலே கொஞ்சம் பொட்டாஷ் அசையத் துவங்குவதை நான் காண்கிறேன். அப்போது நான் மீண்டும் கவனிக்கிறேன், வினோதமான காரியம் என்னவென்றால், ஒரு சிறு ஈரப்பதமும் பெட் ரோலியமும் ஒன்றாக ஓடத் துவங்குகிறது. சரியாக ஒரு சிறு பாறையின் கீழிருந்து ஒரு சிறு ஈஸ்டர் மலர் தன்னுடைய தலையை மேலே உயர்த்துகிறது. பூமியின் மேல் ஜீவன் வருகிறது. அது சத்தமிட்டு, "பிதாவே, வந்து, இதைப் பாரும்” என்று கூறுகிறது. பிதாவாகிய தேவன் அதைப்பார்த்து, "அது மிகவும் அழகாயுள்ளது; அப்படியே தொடர்ந்து மென்மையான தாழ்ந்த சத்தத்தை எழுப்பிக்கொண்டிருக்கட்டும் (cooing)" என்று கூறுகிறார். 34. அவர் மென்மையான அந்த தாழ்ந்த சத்தத்தை எழுப்ப, மலர்கள் மேலே வருகின்றன, புற்கள் மேலே வருகின்றன. மேலும் தாவர ஜீவன், மரங்கள் மேலே வருகின்றன, பறவைகள் பூமியிலிருந்தும், மண்ணிலிருந்தும் பறந்தன; சற்று கழிந்து மிருக ஜீவன் மேலே வருகின்றது. அவரோ தொடர்ந்து மென்மையான அந்த தாழ்ந்த சத்தத்தை எழுப்பிக் (cooing) கொண்டிருந்தார். அதன் பிறகு ஒரு மனிதன் மேலே வருகிறான். அவன் அற்புதமாக காட்சி அளித்தான், ஆனால் அவன் தனிமையாக இருந்தான்; அவனுக்கு எந்த - எந்த துணையும் (help mate) இல்லாதிருந்தது. எனவே அதைப் பார்க்கும் போது.... இப்பொழுது இது மிகவும் பிரியப்படாததாக இருக்க விரும்புகிறேன். தேவன் ஒருபோதும் ஸ்திரீயை மூல சிருஷ்டிப்பில் வைக்கவேயில்லை. அவள் மனிதனுடைய ஒரு உபசிருஷ்டியாக (byproduct) இருக்கிறாள். மனிதனும் ஸ்திரீயும் ஒன்றே. ஒரு ஸ்திரீ, ஆதியிலே, அவர் ஆதாமிலிருந்து ஸ்திரீயை எடுத்தார். உண்மையில், மனிதனும் மனைவியும் ஒன்றே, ஆனால் அவர்களை மாம்சத்தில் வைக்க, அது மீண்டுமாக தங்களைத் தாங்களே பிரதி உற்பத்தி (reproduce) செய்தாக வேண்டி இருந்தது. ஆனால் அவர் மனிதனுடைய பெண் தன்மை கொண்ட பாகத்தை எடுத்து, அதிலிருந்து ஒரு ஸ்திரீயை உண்டாக்கினார். 35. ஆகையால், ஒரு ஸ்திரீ ஒரு மனிதனைப் போன்று நடந்து கொள்ளவோ, ஒரு மனிதனைப் போன்று உடையுடுத்தவோ, ஒரு மனிதனைப் போன்று பேசவோ முயற்சிக்கும் போது, அவள் தன்னுடைய ஸ்தானத்துக்கு வெளியே இருக்கிறாள். ஒரு பெண் என்பவள் பெண்தன்மை கொண்டவளும் (feminish), இனிமையானவளும், அன்புள்ளவளுமாக இருக்கிறாள், அவள் ஒரு மனிதனைப் போன்று பெரியவளாகவோ, அவ்விதம் தொடர்ந்து போகவோ, அவனைப் போன்று நடந்து கொள்ளவோ மாட்டாள். நல்லது, அவள் அவ்வாறு இருக்கும்படி எதிர்பார்க்கப்படவில்லை. அவள் அவ்வாறு செய்யும்போது, அவளுடைய ஜீவியம் தாறுமாறான நிலையில் உள்ளது. அவள் இனிமையானவளும், அன்புள்ளவளும், இரக்கமுள்ளவளுமாய் இருக்கிறாள், அங்கே ஆதாமோ அதிகமாக ஆணுக்குரிய பெரிய உறுதியுள்ள வகையினனாயிருக்கிறான், அவன் மனிதனாக இருந்தான், பெண்ணோ பெண் தன்மை கொண்டவளாயிருந்தாள், ஆனால் அது அதே ஆவியாகத்தான் இருக்கிறது, அவர் அவளை ஆதாமிடமிருந்து எடுத்தார். மேலும் கவனியுங்கள், ஒரு மனிதன் ஒரு மனைவியை ஏற்றுக்கொள்ளும் போது, அவன் இந்த மனைவியை தன்னுடைய மார்புக்குள் எடுத்துக்கொள்கிறான் (நாம் இரு பாலரும் கலந்த கூட்டமாயிருக்கிறோம்.), அவன் இந்த பெண்ணை தன்னுடைய இனிய இருதயமாக தன் மார்புக்கு கட்டி அணைத்துக் கொள்கிறான், அப்போது அவள், அவன் மேல் தன்னுடைய முத்திரையை வைத்து விடுகிறாள். அங்கே வேறொரு பெண் அதை என்றென்றுமாக கெடுத்துப் போடுகிறாள். அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். வேறு எந்தப் பெண்ணும் அந்த அச்சை எந்தவித்திலும் பொருத்தக் கூடாது. உங்கள் கரங்களை ஒரு பெண்ணைச் சுற்றிலும் போட்டுக் கொள்ள, உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அது சரியே. உங்களுக்கு ஒரு மனைவி இருக்கிறாள், நீங்கள் அவளையே உங்கள் மார்போடு இழுத்துக் கொள்ளுங்கள், தேவன் அவளை உங்கள் இருதயத்தில் வைத்து, உங்களை அவள் மேல் முத்திரை போட்டு விட்டார், அவள் உன்னுடையவளாக இருக்கிறாள். நீ அவளுக்கு சொந்தமானவனாக இருக்கிறாய். 36. பெண்ணே, நீ வேறொரு மனிதனை உன்னுடைய கரத்தில் எடுத்துக் கொண்டால், நீ எடுக்கப்பட்டிருந்த அந்த அச்சை (வார்ப்புருவை) நீ சிதைத்துப் போட்டிருக்கிறாய். அது ஞாபகம் இருக்கட்டும். நீ ஒரு மனிதனைப் போல நடந்து கொள்ளும்போது, நீ உன்னுடைய ஸ்தானத்திற்கு வெளியே இருக்கிறாய். மனிதனும் கூட பெண் தன்மை கொண்டவனாவதற்குத் துவங்கும் போதும், சிறு பிள்ளைத்தனமாக நடக்கத் துவங்கும் போதும், மேலும் இதையும், அதையும், மற்றதையும் செய்யத் துவங்கும் போதும், அவன் தன்னுடைய ஸ்தானத்திற்கு வெளியே இருக்கிறான். அவன் முதலாளியாக இருக்கிறான்; அவன் ஆளுகை செய்பவனாக இருக்கிறான். இல்லை... இப்பொழுது, ஒரு மிதியடியாக (floor mat) இருப்பதாக நான் அர்த்தம் கொள்ளவில்லை; ஆளுகை செய்யும் ஒருவன் என்று நான் சற்று முன்பு கூறினேன், துணையாக இருப்பதையே (help mate) அர்த்தப்படுத்துகிறேன். பெண்களை திரும்பத் திரும்ப காலால் உதைக்க அல்ல, அவர்கள்.., அல்ல. ஆனால் வேதாகமம் கூறுகிறது.., தேவன் சிருஷ்டிப்பில், "நீ (அவன்) உன்னை ஆண்டு கொள்ளுவான்" என்று கூறியுள்ளார். ஒரு முதலாளியாக இருப்பது அல்ல, ஆனால் ஒரு துணையாக, உங்களின் ஒரு பாகமாக இருப்பதற்குத் தான். அவள் இனிமையாகவும், அன்பானவளாகவும், மென்மையாகவும் இருக்கிறாள்; நீங்கள் அவளைச் சுற்றிலும் இனிமையாக வழிநடத்த வேண்டும், ஏனென்றால் அவள் உங்களின் ஒரு பாகமாக இருக்கிறாள். நீங்கள் அவளைத் தவறாக நடத்தும்படிக்குப் போவீர்களானால், நீங்கள் உங்களைத்தானே தவறாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். மனரீதியாக சரியாயிருக்கும் ஒரு மனிதன் அவ்வாறு செய்ய மாட்டான். சரி. 37. எனவே இப்பொழுது, கவனியுங்கள். ஆனால் அவன் இந்த மனிதனைக் கண்டபோது, அவன் எப்படி ஒரே விதமாக (specie) இருந்தான். ஏதோவொரு மகத்தான வரலாற்றுக்கு முந்தைய மிருகம் என்று நான் நம்புவதில்லை. அவன் ஒரு மனிதனாக இருந்தான் என்றும், அவன் எப்படியிருந்தான் என்று தேவன் சொன்னது போலவே அவன் இருந்தான் என்றும் நான் விசுவாசிக்கிறேன். ஏவாள்... போன்ற ஏதோவொன்றாக இருந்தாள் என்று நான் நம்புவதில்லை. நான் ஒருமுறை கிரீசில் இருந்த ஒரு - ஒரு அருங்காட்சியகத்தில் நின்று கொண்டு, ஏதோவொரு பிரபலமான படத்தைக் கண்டேன்.... ஒரு ஏவாளும் ஆதாமும். அங்கே ஆதாம் இருந்தான், மேலும் தலைமயிர், என்னே, அவனுடைய மூக்குக்கு வெளியே அவ்விதமாக இருந்தது, ஏவாளும், ஓ, அப்படிப்பட்ட பயங்கரமாகத் தோற்றமளிக்கிற சிருஷ்டியாக இருந்தது. ஒரு காலானது மற்ற காலைக் காட்டிலும் பெரிதாகவும் மற்றும் காலானது வெளியே பக்கவாட்டில் (இந்த) விதமாக இருந்தது, அவளுடைய பற்கள் இந்த விதமாக இருந்தன. அது ஆதாம் முதலாவது கண்டதாக இருந்திருக்குமானால், அவ்விதமான ஒரு பெண்ணை ஒரு மனிதன் பாராட்டியிருப்பான். அது என்னவாக இருந்தது-? அது கடும் முயற்சி செய்தலாக (strain) இருக்கிறது; அது தான் காரணம்... துவக்க முதலே, மனிதர்கள் தான் ஒரு பாவி என்று உணர்ந்து கொள்ளும் போது, அவன் ஏன் கிறிஸ்துவிடம் வருவதில்லை-? அவன் இன்னும் புதர்களில் மறைந்து கொள்கிறான், தேவன் இன்னும் அழைத்துக் கொண்டேயிருக்கிறார். அவன் ஆதியில் என்ன செய்தான் என்பதையே அது காண்பிக்கிறது; அவன் அதைக்கொண்டு தான் உண்டாக்கப்பட்டு இருக்கிறான், அவன் துவக்க முதலே ஒரு கோழையாக இருக்கிறான். 38. இப்பொழுது, ஆனால் ஏவாள் அழகானவளாக இருந்தாள்; அவள் மிகவும் அழகாயிருந்தாள். ஆதாம் அப்படியே ஒரு சாதாரண மனிதனாகவும், பலமான பெரிய தசைகள் கொண்டவனாகவும், அவனுடைய கழுத்தைச் சுற்றிலும் நேர்த்தியில்லாத தலைமயிரை உடையவனாகவும் இருந்தான். நாம் கூறுவோம், ஏவாள்.... அவர்கள் இருவருமே நிர்வாணமாக இருந்தார்கள்; அவர்கள் எந்த பாவத்தையும் அறிந்திருக்கவில்லை. மேலும் அவர்கள்... முதலாவது நாள் அவர்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள், ஆதாம் அவளை நோக்கிப் பார்த்து, அவன், ஏன், இவள் என் மாம்சத்தில் மாம்சமும் என் எலும்பில் எலும்புமாயிருக்கிறாள்” என்றான். ஏன்-? அவள் அவனிடமிருந்து எடுக்கப்பட்டிருந்தாள்; அவள் அவனுடைய பாகமாக இருந்தாள். மூல சிருஷ்டிப்பில் அல்ல, அது முடிந்திருந்தது, ஆனால் அவர்கள் ஒருவராயிருக்கிறார்கள் என்பதை காண்பிக்கும்படியாக, அவர் (அவனிடமிருந்து) எடுத்தார். இன்று பெந்தேகோஸ்தே ஜனங்கள் மத்தியில் விவாகமும் விவாகரத்தையும் குறித்து என்ன-? அப்படியானால் நாம் போதிக்கிறோம்.... ஓ, நீங்கள் நிச்சயம் மறுபடியும் பிறந்தாக வேண்டும் என்று நாம் விசுவாசிக்கிறோம். நான் எதில் வந்து கொண்டிருக்கிறேன் என்று பார்த்தீர்களா-? நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால், நாம் அதைப் போன்றே ஜீவிப்போம். நாம் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோமோ அதை உற்பத்தி செய்வோம். அதற்குக் காரணம் என்னவென்றால், நாம் நம்முடைய சிந்தையை சபையின் மேலும், இந்த ஸ்தாபனத்தின் மேலும், இந்தக் குழுவின் மேலும், இந்த ஸ்திரீயின் மேலும், அந்த மனிதன் மேலும் வைத்திருக்கிறோம். உங்களுடைய சிந்தையை அவைகளை விட்டு எடுத்து விடுங்கள்; அவைகள் தோல்வியடைந்து விடும். உங்களுடைய சிந்தையை கிறிஸ்துவின் மேல், அவருடைய வார்த்தையின் மேல் வைத்திருங்கள், அப்போது அது தோல்வியடைய முடியாது. அவரே உங்கள் திருஷ்டாந்தமாக இருக்கட்டும், எந்த மனிதனும் அல்ல. 39. அநேக நேரங்களில், இந்த ஜனங்கள் தேசத்தினூடாக கடந்து செல்லும்போது, தெய்வீக சுகமளிப்பவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், ஜனங்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்களை ஒரு திருஷ்டாந்தமாக எடுத்துக்கொள்கிறார்கள். நீங்கள் உங்களுடைய சிந்தையை அவர்களை விட்டு அகற்றி விடுவது தான் நல்லது. அது சரியே. நீங்கள் உங்கள் சிந்தையை கிறிஸ்துவின் மேல் வைத்திருங்கள்; உங்கள் சிந்தையை வைக்க வேண்டியவர் அவர் ஒருவர் தான், உங்களுடைய மேய்ப்பரின் மேல் அல்ல. உங்களுடைய மேய்ப்பரை நேசித்து, அவருக்கு மரியாதை செலுத்துங்கள்; உண்மையிலேயே அவர் கௌரவமான ஒரு மனிதரும், அவர் ஒரு தேவ மனிதருமாயிருக்கிறார். ஆனால் கிறிஸ்துவின் மேல் உங்கள் சிந்தையை வைத்திருங்கள், உங்களுடைய நேசம் கிறிஸ்துவின் மேலேயே இருக்கட்டும். அவர் என்னவாக இருக்கிறார் என்பதற்காகவும், ஒரு ரெவ்ரண்டாகவும் (reverend) அவருக்கு மரியாதை செலுத்துங்கள், ஏனென்றால் அவர் உங்களுக்கு தேவனை பிரதிநிதித்துவப் படுத்துகிறவராயிருக்கிறார். இப்பொழுது, ஆனால், பிறகு நாம் அவர்களைக் கவனிப்போமானால், அவர்கள் எவ்வளவு இனியவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் இருந்தார்கள். மேலும் இப்பொழுது, அவளுடைய கண்கள் நட்சத்திரங்கள் பிரகாசிப்பது போன்று, அவைகள் எவ்வளவு நீலநிறமாக இருக்க முடியுமோ அவ்வளவு நீலநிறமாக தோற்றமளித்தன என்று கூறுகிறேன், அவைகள் (அது) போன்று ஒளிவீசிக் கொண்டிருந்தன. அவள் நிச்சயமாக அழகாக இருந்திருக்க வேண்டும். ஆதாம் அவளை நோக்கிப் பார்த்தான்; ஏன், முதலாவது பார்வையிலேயே அது அன்பாக இருந்தது. ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது, அவள் அவனுடைய பக்கவாட்டிலிருந்து (side) எடுக்கப்பட்டிருந்தாள். 40. நாம் இதைக் கூறுவோம், அவன் கரத்தினால் அவளைப் பற்றிப்பிடித்திருக்க வேண்டும், அவன், அன்பே, நாம் கொஞ்சம் உலாவலாம்” என்று கூறினான். அது பல வருடங்களுக்கு முன்பு, திரு. மற்றும் திருமதியாகிய நீங்களாக இருந்தது. நாம் கொஞ்சம் உலாவினோம், அவர்கள் தோட்டத்தினூடாக சென்றார்கள். நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், அங்கே காட்டில் கொடிய கர்ஜனை சத்தம் (roar out) வருகிறது. அது யார்-? அது சிங்கமாகிய சிம்மமாக (Leo) இருந்தது. அவளால் பயப்பட முடியவில்லை; பயப்பட அவளைக் குறித்து எதுவுமே இல்லாதிருந்தது, அவளிடம் பரிபூரண அன்பு இருந்தது; அன்பானது பயத்தைப் புறம்பே தள்ளும். மேலும் அவன்.... ஆதாம், சிங்கமே, இங்கே வா. ஏவாளே, நீ ஒரு போதும் அதைச் சந்தித்திருக்கவில்லை. இது, நான் இதை, சிங்கம் என்று அழைத்திருக்கிறேன்; நான் இங்கேயுள்ள எல்லாவற்றிற்கும் பெயரிட்டிருக்கிறேன்" என்று கூறினான். அவன் கழுத்தின் பின்னால் அதைத் தடவிக்கொடுக்க (scratched), (அது) ஒரு பூனைக்குட்டியைப் போல மியாவ் என்று சத்தமெழுப்பியவாறு (meowed) அவர்களைப் பின்தொடர்ந்தது. புலியாகிய சிறுத்தைப் புலி (Sheetah) வெளியே வருகிறது, அவர்கள்... எல்லா மிருகங்களும் சுற்றிலும் அவர்களைப் பின்தொடர்ந்தன. சற்று கழிந்து, ஆதாம், "ஓ, இனிய இருதயமே, என்னவென்று உனக்குத் தெரியுமா-? இது ஏறக் குறைய சாயங்கால நேரமாக இருக்கிறது; நாம் சபைக்குப் போவது நல்லது" என்றான். நீங்கள் இன்று அவர்களுடைய சந்ததியாக இருக்கையில், அது முதலாவது ஆதாமும் ஏவாளுமாக இருந்தது. 41. "நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்கு (roadhouse) நாம் கட்டாயம் போயாக வேண்டும். நாம் கட்டாயம் பங்கோ விளையாட்டை விளையாட போக வேண்டும்” என்றோ அல்ல, "சூரியன் கீழே போகிற போது, நாம் கட்டாயம் ஆராதிக்கப் போக வேண்டும். அவர்கள் சீமைத்தேக்கினால் முழுவதும் அலங்கரிக்கப்பட்டதும், அதற்குள்ளே 100,000 டாலர்கள் பெறுமானமுள்ள இசைக்கருவியை உடையதுமான ஒரு அருமையான பெரிய சபைக்குப் போகவில்லை. அவர்கள் காடுகளுக்குள் மேலே ஏறிச்சென்றார்கள், அந்த மரம் (timber). அநேகமாக தேவனிடமிருந்து புறப்பட்டுச் சென்ற அந்த லோகோஸ், அது ஒரு அக்கினிஸ்தம்ப வடிவில், ஒளிவட்டமாக இருந்ததாக நாம் கூறுவோம். ஆதாமும் ஏவாளும் ஆராதிக்கும்படி சிருஷ்டிகர் முன்பாக முழங்கால்படியிட்டபோது, அது அதோ அங்கேயுள்ள அந்தப் புதர்களில் தொங்கிக் கொண்டிருப்பதையும், அதிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் (streaks) கீழே பிரகாசிப்பதை என்னால் அப்படியே காண முடிகிறது. அதிலிருந்து ஒரு சத்தம் வந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற இந்த பூமியின் மேல் இன்று என்னுடைய பிள்ளைகள் தங்கி அனுபவித்து மகிழ்ந்தீர்களா-?” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ஆம், பிதாவே, அது அற்புதமாக இருந்து வருகிறது." 42. பாருங்கள், அவர்கள் தொட்டறியக்கூடியவர்களாக இருக்கிறார்கள்; அவர்களால் தொட முடியும்; அவர்களால் புசிக்க முடியும்; அவர்களால் அன்பு செய்ய முடியும்; மேலும் அவர்கள்... ஏன், அவர்கள் - அவர்கள் உண்மையாக இருக்கிறார்கள். அவர்கள் ஆவி அல்ல; அவர்கள் அவர்கள் - அவர்கள் தெளிவாகத் தெரியக் கூடிய ஏதோவொன்றாக இருக்கிறார்கள். மனிதன்... தேவன் தூதர்களை உண்டாக்கினார், ஆனால் அவர் ஒருபோதும் உங்களை ஒரு தூதனாக உண்டாக்கவில்லை; நீங்கள் ஒருபோதும் தூதனாக இருக்க மாட்டீர்கள். இங்கே இவர்கள் எல்லாரும், 'பழுப்பு நிற கண்களை உடைய தூதன் (Brown-eyed angel) எனக்காக காத்திருக்கிறான். அது பிசாசினுடைய ஒரு பொய்யாக இருக்கிறது. ஆனால் உங்களுடைய மனைவி, அவள் இன்னும் உங்கள் மனைவியாகவே இருக்கிறாள். தேவன்.... பூமியின் மேல் நீங்கள் இணைத்ததை (joined), நான் பரலோகத்திலும் இணைப்பேன். நீங்கள் பூமியின் மேல் கட்டுவது எதுவோ, நான் பரலோகத்திலும் கட்டுவேன்." தேவன் இணைப்பதை எதுவுமே பிரிக்காது: பிரிக்க முடியாது. அதன் பிறகு அங்கே அவள் இருந்தாள், ஒரு பெண். அவர்கள், ஆம், கர்த்தாவே, நாங்கள் இன்று உங்கள் (எங்கள்) தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு தந்திருக்கிற பூமியில் அதிக சந்தோஷங்களை அனுபவித்தோம். பிதாவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம்" என்றார்கள். அவர்கள் ஆராதித்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக, இப்பொழுது, நான் படுத்து உறங்குவேன்... பல வருடங்களுக்கு முன்பு, நீங்கள் செய்தது போன்று, தாயார் தகப்பனாரிடம் செய்தது போன்று, ஆதாம் தன்னுடைய பெரிய கரத்தை வெளியே வைக்க, ஏவாள் தன்னுடைய அழகான சிறு தலையை அவனுடைய கரத்தின் மேல் வைத்தாள். 43. அவர்கள் உறங்கின உடனே, அவர் சிங்கமாகிய சிம்மத்தை இங்கே படுக்க வைத்தார், புலியாகிய சிறுத்தைப் புலியை (Sheetah) இங்கே படுக்க வைத்தார், அவர் அவைகள் எல்லாவற்றையும் படுக்க வைத்து, தமது சிருஷ்டிகள் இளைப்பாறும்படியாக தேவன் அவ்வாறு செய்தார். அதன் பிறகு பரலோக சேனை வெளியே வருகிறது. காபிரியேல் நடந்து சென்று, கூறுகிறான், ஆதாமை நோக்கிப் பார்த்து, "பிதாவே, அவன் உம்மைப் போலவே காணப்படுகிறான் என்று உமக்குத் தெரியும்” என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. எத்தனை முறைகள் மனைவியும் நானும் சிறு ஜோசப்பின் படுக்கைக்குச் சென்று, கடந்த இரவு கூட அவ்வாறு சென்று, அவள், "பில்லி, அவனுடைய நெற்றியின் உயரம், அது உம்முடையது போன்றே இருக்கிறது என்பது உமக்குத் தெரியும்” என்று கூறினாள். நான், ஆனால் அவனுடைய கண்கள் உன்னுடையது போலவே பெரியதாக இருக்கிறது” என்றேன். ஏன், அவன் எங்களைப் போலவே காணப்பட வேண்டும்; எங்களுடைய இணைப்பின் மூலம் வந்த குழந்தையாக அவன் இருக்கிறான். மனிதன் தேவனைப் போலவே.., அவருடைய சாயலாக உண்டாக்கப்பட்டான். "பிதாவே, அவன் அப்படியே உம்மைப் போலவே காணப்படுகிறான். அவனுடைய உதடுகளையும் அவனுடைய கண்களையும் பாரும். நிச்சயமாகவே பிதாவானவர் தம்முடைய பிள்ளைகளை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார், அது எவ்வளவு இனிமையாக இருந்தது, ஒருபோதும் வியாதிப்படவோ, மரிக்கவோ, நெஞ்சுவலியைக் கொண்டிருக்கவோ, களைப்புறவோ வேண்டியதில்லை, அது அற்புதமாக இல்லையா-? தாயும் தகப்பனும் ஒருபோதும் வயதானவர்களாக ஆகவில்லை. ஒரு போதும் நரைமுடிகளோ, முகத்தில் சுருக்கங்களோ இல்லை, எப்போதுமே அழகாயும் என்றென்றும் அன்பு கொண்டவர்களாகவும் இருந்தார்கள். 44. அதன்பிறகு பாவமானது உள்ளே வருகிறது. பாவமானது அந்தக் காட்சியை கெடுத்துப் போட்டது. ஆனால் பாவம் தேவனுடைய நோக்கத்தை நிறுத்த முடியாது. தேவன் தோற்கடிக்கப்படவே மாட்டார். எனவே பிறகு, பாவம் உள்ளே வந்த காரணத்தினால், ஸ்திரீயானவள் மனிதனைப் பெற்றாள், அது இரண்டாம் பட்சமாக இருந்தது, ஒரு தாறுமாறாக்கப்பட்ட வழி. தேவன் ஒருபோதும் தம்முடைய சொந்த கரங்களினால் பூமியின் மண்ணிலிருந்து அவனை உண்டாக்கவில்லை, ஆனால் இனச்சேர்க்கை மூலமாக, ஸ்திரீயானவள் அவனைக் கொண்டுவர வேண்டியிருந்தது. அதன் பிறகு என்ன சம்பவித்தது-? பூமியின் மண்ணிலிருந்து நம்முடைய சரீரங்கள் எங்கே உண்டாக்கப்பட்டதோ, அவைகள், தேவன் வெளியே வைத்திருந்த அந்த கால்சியமும், அந்த இடுப்பு பாகமும் (lumber), அந்த பொட்டாசும், இன்னும் உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒருநாள் அதில் கடைசி துண்டு உபயோகப்படுத்தப்படும். அது சரியே. இடுப்புபாக குவியல் (lumber pile) கீழே போய் விடும். ஆனால் தேவன் இன்னுமாக பூமியின் மண்ணிலிருந்து மனிதனை உண்டாக்குகிறார். நீங்கள் எந்தக் காரணமும் இல்லாமலே இந்த பூமியின் மேல் வருகிறீர்கள், நீங்கள் உங்களைத்தானே இங்கே கொண்டுவர உங்களுக்குத் எந்த வழியும் இல்லை, எந்த வழியுமே இல்லாதிருந்தது. தேவன் உங்களை இங்கே கொண்டு வந்தார். 45. அதன்பிறகு பாவமானது அதைக் கெடுத்துப் போட்டிருந்தாலும், தேவன் தோற்கடிக்கப்பட முடியாது, அதன் பிறகு ஜனங்கள் ஒரு தாறுமாறாக்கப்பட்ட வழியின் மூலமாக பூமியின் மேல் வந்து கொண்டிருக்கிறார்கள்; ஆனால் இன்னுமாக தேவனுடைய lumber-ஆனது உபயோகப் படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. பொட்டாசும், கால்சியமும், மற்றும் காரியங்களையும் அவர்-லிருந்து அதைப் புசிக்கும்படி நம்மை அனுமதிக்கிறார். மேலும் உங்களுடைய... மண் வரையில், உன் நெற்றியின் வியர்வையால், நீ ஜீவனம் பண்ணுவாய். ஆனால் மனிதனோ சரியாக அதேவிதமாகவே வருகிறான், அப்படியே சரியாக. தேவன் இன்னுமாக தமது சிந்தையில் அவருடைய நோக்கத்தைக் கொண்டிருக்கிறார். இப்பொழுது, என்ன சம்பவிக்கிறது-? பரிசுத்த ஆவியானவர் இக்காலையில் இந்த பூமியின் மேல் என்னையும் உங்களையும் கொண்டு வந்திருப்பார் என்றால், அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், உங்களையும் என்னையும், இந்த பூமியின் மேல் கொண்டு வந்து, நாம் எப்படியிருக்க வேண்டுமோ அப்படி எந்த தேர்ந்தெடுப்பும் இல்லாமல் நம்மை உண்டாக்கி இருக்கிறார்... நாம் ஒரு தேர்ந்தெடுப்பும் இல்லாமலேயே நாம் இருக்கிறபடியே வருகிறோம். ஒரு தேர்ந்தெடுப்பும் இல்லாமலே நான் இருக்கிற வண்ணமாக அவர் என்னை உண்டாக்கி இருப்பார் என்றால், இன்னுமாக நான் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டு, பிறப்பிக்கப் பட்டிருக்கிறேன், இன்னுமாக செய்யும்படி தேவன் அனுமதித்த ஒரு பாவமான செயலின் மூலமாக, என்னுடைய தகப்பன் மற்றும் தாயிடமிருந்து பரிசுத்த விவாகத்தின் மூலமாக வந்த ஒரு தாறுமாறாக்கப்பட்ட செயலாக அது தேவனுடைய கிருபையினாலே நான் எப்படியிருக்க வேண்டுமோ அவ்வாறு சிறந்த நிலையில் இருக்கிறேன், மேலும் எந்த தேர்ந்தெடுப்பும் இல்லாமல் இருக்கிறேன், (அப்படியானால்), நான் ஒரு தெரிந்து கொள்ளுதலைச் செய்வேன் என்றால், எவ்வளவு அதிகமாக அவர் என்னைக் கடைசி நாட்களில் உயிரோடு எழுப்ப முடியும். 46. இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் ஒரு போதும் பூமியை விட்டுப் போகவில்லை; அது இன்னும் பூமியின் மேல் தான் இருக்கிறது; அது பூமியின் மேலே அடைகாத்துக் கொண்டு இருக்கிறது. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், தேவனுடைய சாயலில் கட்டப்பட்ட பொருட்களாகிய நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்” என்று புறாவைப்போல் மென்மையாக ஒலியெழுப்பிக் கொண்டும், அழைத்துக் கொண்டும், கெஞ்சிக் கொண்டும் (wooing) இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் கெஞ்சிக் கொண்டிருப்பார் என்றால், நாம் திரும்பி வந்து, "ஆம், மகத்தான தேவனே, நீர் என்னை உண்டாக்கினீர், நான் உம்மை நேசிக்கிறேன். நீரே என்னுடைய சிருஷ்டிகர், நான் பாவமுள்ளவனாக இருக்கிறேன், நான் அதைக் குறித்து வெட்கப்படுகிறேன்” என்று கூறுங்கள், அப்பொழுது அவர் எனக்குள்ளே நித்திய ஜீவனை வைக்கிறார். அதன் பிறகு அவருடைய அழைப்புக்கு நான் திரும்ப பதிலளிக்கிறதினாலே அவர் எனக்கு நித்திய ஜீவனைக் கொடுத்து, ஒரு தெரிந்து கொள்ளுதலும் இன்றியே நான் இருக்கிற வண்ணமாகவே என்னை உண்டாக்கியிருப்பார் என்றால், நான் ஒரு தெரிந்து கொள்ளுதலைச் செய்து, பரிசுத்த ஆவியால் நிறையப்பட்ட பிறகு, அவர் எவ்வளவு அதிகமாக என்னை உயிரோடெழுப்ப முடியும். பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய சொந்த ஜீவனாயிருக்கிறது. தேவன் தம்மைத் தாமே இழக்கப்பட முடிவதைக் காட்டிலும் உங்களால் எந்தவிதத்திலும் அதிகமாக அந்த ஜீவனை இழந்து போக முடியாது. அந்த வார்த்தையானது "ஸோயி" என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. நான் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்." 47. ஒரு துவக்கத்தைக் கொண்டிருந்த எதற்கும் ஒரு முடிவும் உண்டு. ஒரு துவக்கமே இல்லாத அந்தக் காரியங்களாக அது இருக்கிறது, ஒரு முடிவைக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதைக் குறித்து எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா-? மகத்தான எஜமானாகிய தேவன் ஆகாயங்களில் வானவில்லை (வைத்திருக்கிறார்) தேவனுடைய ஏழு ஆவிகளை உடையதாக (நாம் அவ்விதமாகக் கூறுவோம். சிவப்பு, பரிபூரண அன்பு. பிலியோ அன்பு வந்த பிறகு, அகப்போவிலிருந்து பிலியோ அன்பு. உங்களுடைய மனைவிக்காக நீங்கள் கொண்டிருக்கும் அன்பு அது தான். ஏதோவொரு மனிதன் அவளை அவமரியாதை செய்தால், நீங்கள் அவனுடைய மூளையை துப்பாக்கியால் சுட்டு, அவனை சாகடித்து விடுவீர்கள் (shoot out). பாருங்கள்-? ஏனென்றால் அது பொறாமையை உண்டாக்கி விடுகிறது. ஆனால் அது பிலியோ அன்பாக இருக்கிறது, அது இரண்டாம் பட்சமான அன்பு தான். அதன் பிறகு வேறொரு மனிதனுடைய மனைவியின் பேரில் இச்சை வருகிறது. அதன் பிறகு அசுத்தம் வருகிறது. பாருங்கள்-? அது அப்படியே தாறுமாறானதாக ஆகிவிடுகிறது. ஆனால் இந்த வகை அன்பு எல்லாவற்றிற்கும் ஒரு துவக்கம் இருந்தது. ஆனால் நான் பேசிக் கொண்டிருக்கிற உண்மையான அசலான தேவனுடைய அன்பு, புதுப்பிறப்பின் மூலமாக, மறுபடியும் பிறந்திருப்பதின் மூலமாகவே மனிதனுக்குள் வருகிறது, அதற்கு எந்த துவக்கமும் இல்லை, அதற்கு எந்த முடிவு இருக்காது. அப்போது நீங்கள் தேவனுடைய ஒரு குமாரனாகவும், தேவனுடைய ஒரு குமாரத்தியாகவும் இருக்கிறீர்கள், உங்களுடைய நேசங்கள் பரத்தில் உள்ளவைகளின் பேரிலேயே உள்ளது. 48. பிலியோ அன்பானது உங்கள் மனைவியை அவமதிப்பதற்காக ஒரு மனிதனைச் சுடும்படி செய்யும். அகப்பா அன்பானது அவனுடைய இழக்கப்பட்ட ஆத்துமாவுக்காக உங்களை ஜெபிக்கும்படி செய்யும். அது தான் வித்தியாசம். எனவே நீங்கள் கட்டாயம் மறுபடியும் பிறந்தாக வேண்டும். அந்த... எந்த... வெறுமனே நட்பு ரீதியான அன்பாக இருந்தால், "ஓ, நான் அசெம்பிளிஸ்களைச் சேர்ந்தவன்” என்று நான் கூறுகிறேன். "நீங்கள் சர்ச் ஆஃப் காட் சபையைச் சேர்ந்தவரா, ஐயா” என்று அதைக் கூறுகிறீர்கள். நானோ, "ஓ, நிச்சயமாக, நாங்கள் அற்புதமான நட்பையும், ஐக்கியத்தையும் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறேன். இன்னும் அது அதுவாக இருக்கவில்லை. நாம் இங்கே இந்தக் காலையில், ஸ்தாபன பாகுபாடற்றவர்களாக (interdenominational) இருக்கிறோம் என்பதை அறிவேன். ஆனால் சகோதரர்களே, இதுவே முழு பதிலும் அல்ல. இது நட்புக்கும் ஐக்கியத்திற்குமான பதிலாகவே உள்ளது, ஆனால் தேவனைக் குறித்து என்ன-? நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா-? 49. அகப்போ அன்பானது பிலியோ அன்பிலிருந்து வித்தியாசமானது. பிலியோ அன்பு என்பது என்ன, நாம் ஒன்றாக கூடி வந்து, ஒருமித்து தர்க்கம் பண்ணி, ஆமாம், நாங்கள் சகோதரர்களாக இருக்கிறோம்" என்று கூறுகிறோம், அது அருமையானது தான், உங்கள் கரத்தைக் குலுக்குதல், நிச்சயமாக. "ஏன், நான் ஸ்தாபன பாகுபாடற்றவன்," நிச்சயமாக, ஒரே சிறகுள்ள பறவைகள் ஒன்றாகத்தான் இருக்கும். நாம் அவ்வாறு தான் இருக்க வேண்டும். எனக்கு அது பிடிக்கும். அது நல்லது தான், நீங்கள் இங்கே ஒரு நல்ல முக்கிய விஷயத்தைப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் அதைக் குறித்தது எல்லாம் அதுவல்ல, சகோதரனே. பூமியிலுள்ள எல்லாவற்றிலுமிருந்தும், இந்தக் கால்சியத்திலும் பொட்டாஷிலும் வைத்து, நித்திய ஜீவனை நமக்குக் கொடுக்கிற ஒருவரிடத்திற்கு, அதோ அங்கேயுள்ள அந்த சிருஷ்டிகரிடத்திற்கு நம்மை இழுக்கிற வேறு ஏதோவொன்றை நாம் கொண்டிருந்தாக வேண்டும். அது எவ்வளவு வயதானதாக இருந்தாலும், எவ்வளவு தோல் சுருக்கம் இருந்தாலும், அது எவ்வளவாக முழுவதும் உலர்ந்து போயிருந்தாலும் (dried-up), அல்லது அது எவ்வளவாக வியாதிப்பட்டு இருந்தாலும், அது காரியமில்லை, அதனுடைய ஒவ்வொரு அவுன்ஸையும் தேவன் அறிவார்; உலகத் தோற்றத்திற்கு முன்பே, அவர் அதைத் தம்முடைய அளவைகளால் எடையை அளந்து விட்டார். ஒரு தீர்மானம் செய்வதற்கு மாத்திரமே நான் இதை உள்ளே வைத்திருந்தேன். நான் கிறிஸ்துவோடு என்னுடைய தீர்மானத்தைச் செய்திருக்கிறேன், மேலும் அங்கே... கடைசி நாளில் நான் உயிர்த்தெழுந்து, அவருடைய சாயலுக்குள் உண்டாக்கப்படுவதிலிருந்து நரகத்திலுள்ள எல்லா பிசாசுகளாலும் என்னை நிறுத்தி வைக்க முடியாது. 50. ஆனால் அந்த நித்திய ஜீவன் இல்லாமல், இந்த ஐக்கிய ஜீவியம், மங்கி மறைந்து போய் விடும். அதற்கு ஒரு துவக்கம் இருந்தது; அது ஒரு முடிவையும் கொண்டிருக்கும். ஆனால் நித்திய ஜீவனைக் கொண்டு, நித்தியம் தாமே மரிக்க முடிவதைக் காட்டிலும் அதிகமாக அதனால் மரிக்க முடியாது. நித்தியம் என்பது என்ன-? ஒரு பரிபூரண வட்டமாக இருக்கிறது, அதற்கு எந்த முடிவும் கிடையாது. அப்படியே அதை சுற்றி வருவது.., அவர் அதை இந்த விதமாக சுற்றிலும் வைக்கத் தொடங்கினார், அது அந்த மேஜையினூடாகவும், அந்த தரையினூடாகவும், பூமியினூடாகவும் போயிருந்தது; அது இன்னும் ஒரு பரிபூரண வட்டமாக இருக்கிறது. தேவனுக்கு எந்த துவக்கமோ அல்லது முடிவோ இல்லாதிருந்தது. அவர் பூமியிலிருந்து அடைகாத்திருக்கிற இந்த மாம்சத்தில் அந்த ஆவியை நமக்குள் வைக்கிற போது, நம்முடைய பிலியோ அன்பானது, அகப்போ அன்பின் மூலமாக புறக்கணிக்கும் ஒரு கட்டத்திற்குள்ளாகி விட்டது, அப்பொழுது இந்த பூமியிலிருந்து போஷிக்கப்பட்டும் அடைகாக்கப்பட்டும் இருந்து வருகிற இந்த கால்சியத்திலும் பொட்டாஷிலும் நித்திய ஜீவனை நாம் பெற்றுக்கொண்டோம், எவ்வளவு அதிகமாக அதை உண்டாக்கின தேவனாலே அதை மீண்டும் உயிரோடெழுப்ப முடியும். ஆகையால், நீங்கள் நிச்சயமாக மறுபடியும் பிறந்தாக வேண்டும். 51. இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஒரு காலை உணவில் இருந்தேன், வெறுமனே இரண்டு ஊழியக்காரர்கள், நானும், ஒரு மெதோடிஸ்டு பிரசங்கியாரும். அது காலை உணவு அல்ல, அப்படியே ஒரு சிறு மதிய உணவு, நாங்கள் சில ஐஸ்கிரீம்களை ஒன்றாகக் கொண்டிருந்தோம். கென்டக்கியிலுள்ள 4-H சங்கமானது காண்பிக்கப்பட்டிருந்தது, அவர்கள் அந்த வானொலி நிகழ்ச்சியை ஆன் செய்தார்கள், வயல் நிலத்தில் நீங்கள் வளர்ப்பது போன்று அப்படியே சரியாக சோள தானியங்களை உற்பத்தி செய்யக் கூடிய ஒரு சிறு இயந்திரத்தை அவர்கள் முழு நிறைவாக உருவாக்கியிருந்தார்கள். அவர்கள், வயல் நிலத்தில் பயிரான ஒரு கோணிப்பை சோள தானியத்தையும், அந்த இயந்திரத்தின் மூலமாக உண்டாக்கப்பட்ட மற்ற கோணிப்பை சோள தானியத்தையும் எடுத்து, அவைகளை ஒன்றாகக் கலந்தால், ஒன்றிலிருந்து மற்றொன்றை உங்களால் கூற முடியாது. ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு கைப்பிடி தானியங்களை எடுத்து, அவைகளை ஒன்றாகக் கலந்து விடுவோம்; மீண்டும் அதை எப்பொழுதாவது சொல்லுவதற்கு அங்கே எந்த வழியும் இல்லை" என்றார்கள். பாருங்கள்-? அவர்கள் ஒரே சோள ரொட்டியையே செய்கிறார்கள்; அது கரடுமுரடாக அரைக்கப்பட்ட ஒரே சோள தானியத்தையே (grits) உண்டாக்கும்; அது ஒரே சோள சீவல்களையே உண்டாக்கும்; அது அதற்குள் போகிற ஒரே அளவான பொட்டாஷ், கால்சியம் மற்ற எல்லாவற்றையும் பெற்றிருக் கிறது. சரியாக அங்கே உள்ளேயிருக்கும் எல்லாமும், அந்த தானியத்தின் மையப்பகுதியும், வெளிப்புறமுள்ள தோலும் கூட அப்படியே பரிபூரணமாக இருக்கிறது. ஆய்வகத்திலும் கூட, அவைகளைத் தனித்தனியாக வெட்டி, வித்தியாசத்தைக் கூற உங்களால் முடியாது. நீங்கள் எப்பொழுதாவது அவைகளை அறிந்துள்ளீர்கள் என்று கூறுவதற்கான ஒரே வழி என்ன என்றால், அவைகளை நடுவது தான். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம். 52. அது எவ்வளவு உண்மையாக இருப்பதாக தோற்றமளித்தாலும் காரியமில்லை, சகோதரனே, அங்கே தேவனுடைய அந்தத் தொடுதலை அது கொண்டிருந்தாக வேண்டும், நித்திய ஜீவன். தேவன்... அந்த ஒன்று. தேவன் வயல் நிலத்தில் வளர்த்து, தம்மையே உண்டாக்கி, மறுபடியும் எழுப்புகிறார். மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒன்றோ.... காரிய மில்லை. எனவே மனிதனால் உண்டாக்கப்பட்ட நம்முடைய ஸ்தாபனங்கள், மனிதனால் உண்டாக்கப்பட்ட மார்க்கம், அவைகள் இன்னுமாக ஏதேன் தோட்டத்திலிருந்தே அத்தி இலைகளாகத்தான் இருக்கின்றன; மனிதன் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்து, அவர்களுக்குள் நித்திய ஜீவனைக் கொண்டிருப்பது மட்டுமாக அது ஒரு போதும் கிரியை செய்யாது. ஊழியக்கார நண்பர்களே, நான் உங்களுடைய நேரத்தில் மிக அதிகமானவற்றை எடுத்துக் கொள்கிறேன், ஆனால் இங்கிருந்து போவதற்கு முன்பாக நான் இதைக் கூற விரும்புகிறேன், உங்களோடு இதை விட விரும்புகிறேன். உங்கள் சகோதரனாக, உங்களை நேசிக்கிற ஒருவனாக, இப்பொழுது இங்கிருந்து போவதற்கு முன்பாக, இந்தக் கருத்தை சற்று நினைவில் கொள்ளுங்கள். கொஞ்ச காலத்திற்கு முன்பு, அங்கே ஒரு மகத்தான மனிதன் இருந்தான், அவன் கைதேர்ந்த நிபுணனாக விளங்கிய ஒரு வாலிபனாக இருந்தான். ஓ, அவனால் எப்படியாக இசைக் கருவியை வாசிக்க முடிந்தது. அவன் அப்படியே தன்னுடைய இசையைக் கொண்டு, உலகத்தை நிரப்பிக் கொண்டிருந்தான். அவன் அதனுடைய ஒரு மகத்தான கலைஞனாக இருந்தான். எனவே ஒரு இரவில், ஒரு குறிப்பிட்ட தேசத்தில், இங்கிலாந்து தேசத்தில், அநேக ஆயிரக்கணக்கான ஜனங்களை பொழுதுபோக்குவித்துக் கொண்டிருந்தான். சுற்றிலும் எல்லா இடங்களிலும், அவர்கள் இந்த மகத்தான கைதேர்ந்த நிபுணனைப் (பார்த்து மிகவும் திகைத்துப்போனார்கள். அந்த ஜனங்கள்.... அவன் தன்னுடைய கச்சேரியை, அல்லது அவனுடைய இசையை இசைத்த பிறகு, அவர்கள் கூச்சலிட்டு, தங்கள் கரங்களைத் தட்டி னார்கள், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த வாலிபனோ அவர்களுடைய கைதட்டலின் பேரில் எந்த கவனமும் செலுத்தாமல், தொடர்ந்து மேலே நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பதை அவர்கள் கவனித்தனர். 53. அவர்கள் - அவர்கள், அவனுடைய - அவனுடைய இசையை பாராட்டி, அவன் ஒரு மேதை என்று அவன் அறிந்து கொள்ளும்படி செய்ய அவர்களால் எவ்வளவு சத்தமிட முடியுமோ அவ்வளவு உரத்த சத்தமாக, கூச்சலிட்டுக் கொண்டும், ஓ, அப்படியே தொடர்ந்து செய்து கொண்டும் இருந்தார்கள். ஆனால் அவனோ தொடர்ந்து மேலே நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று அவர்களுக்கு வியப்பாயிருந்தது. ஆனால் மேலே பால்கனியின் உச்சியில், வயதான குருவாகிய ஆசிரியர் அங்கே மேலே ஏறிப் போயிருந்தார்; அந்தக் குருவாகிய ஆசிரியர் அதைக் குறித்து என்ன சொல்லப் போகிறாரோ என்றே அவன் வியந்தவனாக அவன் தன்னுடைய கண்ணை வைத்திருந்தான். அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று அவன் கவலைப்படவில்லை; அந்த ஆசிரியர் என்ன கூறுவார் என்றும், அந்த வயதான குருவாகிய ஆசிரியர் என்ன கூறுவார் என்பதைக் குறித்தே அவன் அக்கறை கொண்டான். சுவிசேஷத்தின் ஊழியக்காரர்களே, நாம் இந்த பெரிய கூட்டங்களையும் (campaigns) ஜனங்களுடைய கைதட்டல்களையும் கவனிக்க வேண்டாம்; உங்களுடைய கண்களை எஜமானர் மேலேயே வைத்திருங்கள். அந்த நாளில் நம்மை உயிர்த்தெழச் செய்யக் கூடிய ஒரே ஒருவர் அவர் தான். 54. நாம் ஜெபிப்போம். பிதாவாகிய தேவனே, பதட்டமான ஒரு நபரிடமிருந்து இந்த நயமற்ற சிறு குறிப்பு - கருத்து வந்து கொண்டிருக்கிறது, ஆனால், இவர்கள் உணர்ந்து கொள்ளும்படி, என்னுடைய சகோதர சகோதரிகளின் இருதயங்களின் ஆழத்திற்குள் அது எப்படியாவது போக வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், தேவனே, நாங்கள் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ, அல்லது இதை, அதை அல்லது மற்றதைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தாலும் அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காது; நாங்கள் எங்கள் கண்களை எஜமானர் மேலேயே வைத்திருக்கட்டும். மறுபடியும் பிறந்தவர்களாக இருப்பதற்கு அந்த அளவற்ற அன்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் நாங்கள் மரணத்தை விட்டு ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வது என்பதும் நினைவில் வைத்திருக்கிறோம். நாங்கள் பரிபூரண ஜீவனை (abundance of Life) உடையவர்களாயிருக்கிறோம், பரிபூரண ஜீவன் என்பது தேவன் மனிதனுக்குள் வைக்கிற ஏதோவொன்று பொங்கி வழிதலாகும். 55. இந்தக் காலையில், நாங்கள் ஊழியக்காரர்களாக, இந்தச் சிறு கூடுகைக்காக, இங்கே ஒன்றுகூடி வந்திருக்கையில், நாங்கள் எங்களுடைய சிந்தைகளை எஜமானர் மேலேயே வைத்திருக்கட்டும், அந்த நாளில் அடைகாக்கும் படியாக, பரிசுத்த ஆவியை அனுப்பக்கூடிய (send forth) ஒரே ஒருவர் அவர் தான் என்பதை அறிந்திருக்கிறோம். இந்த மகத்தான ஹைட்ரஜன் குண்டானது பூமியைத் தாக்கும் போது, அவள் மறுபடியுமாக திரும்ப வெண்மையான பாலைவனத்திற்கு திரும்பி விடுவாள் (back again), தேவன் எல்லா இடங்களையும் மறுபடியும் புதிதாக துவங்குவார். ஒரு தீர்மானம் செய்த அந்த ஜனங்களுடன் அது வரும். அவர்களுடைய சரீரங்கள் இங்கே கிடக்கும், அவைகள் திரும்பவும் பொட்டாசுக்கும், கால்சியத்திற்கும், பெட்ரோலியத்திற்கும் திரும்புமே தவிர வேறு எதுவுமில்லை. ஆனால் அவர்களுடைய ஆவியை எடுத்த பரலோகத்தின் தேவன் அவர்கள் இருந்தது போல திரும்ப அவர்களை வைக்க முடியும். ஏதோவொரு நாளில், இயேசு வரும்போது, டெவலப் செய்யப்படும் அந்தப் படத்தின் நெகட்டிவ் -ன் ஒரு நிழல் மாத்திரமே இது. அப்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்போம், நாங்கள் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்து கொள்வோம். அது வரையில், மேலே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிற, விசுவாசமுள்ள ஊழியக்காரர்களாக (loyal servants) எங்களை வைத்தருளும், இயேசுவின் நாமத்தில். ஆமென். உங்களுடைய மிக அதிக நேரத்தை நான் எடுத்துக் கொண்டதற்காக மிகவும் வருந்துகிறேன். அது ஏற்கனவே ஏறக்குறைய 9:30 மணியாகி விட்டது. நான் உங்களுக்கு மிகவும் நன்றி கூறுகிறேன். நான் உடனடியாக வீட்டிற்குச் சென்று, ஜெபத்திற்காகவும், இன்றிரவு வியாதியஸ்தருக்காகவும் ஆயத்தப்படுவேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக… *******